டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்

விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணாச்சாரியா விருது

ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தூதவர் - விஜயலட்சுமி பண்டிட்

பிரிட்டனில் நிழல் பிரதமர் என்றழைக்கப்படுபவர் - எதிர்க்கட்சித் தலைவர்

மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை - 639

ஐ.நா.சபை தொடங்கப்பட்ட ஆண்டு - 1945

இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - நெஸட்

இண்டர்போல் அமைப்பின் இந்தியப் பிரதிநிதி - சிபிஐ

பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டுத் தலைவர்கள் - "எல்லைக் காந்தி" கான் அப்துல் கபார்கான் மற்றும் நெல்சன் மண்டேலா

மனித மூளையின் எடை - 1.4 கிலோ

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகலுக்கு ஒரு முறை நடைபெறுகிறது - நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை

மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு - ஆமை

இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரஸா (1979)

ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - பாது அத்தையா

பேங்க் என்ற சொல் பெஞ்ச் என்று பொருள்படும் - இத்தாலிய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

நோபல் பரிசளிக்கும் பொறுப்பு யார் வசமுள்ளது - நோபல் பவுன்டேஷன் ஆஃப் ஸ்வீடன்

ஜப்பானின் மற்றொரு பெயர் - நிப்பான்

ஒளவை பாடிய நூல்கள் - பன்னிரென்டு

சிவாஜி ஹாக்கி ஸ்டேடியம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி

உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நாடு - பிலிப்பைன்ஸ்

கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுநாதர் உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 33

காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தியவர் - அன்னிபெசன்ட் அம்மையார்.

ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் உள்ள இடம் - டோக்கியோ

இந்தியாவின் நவீன ஓவியங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் - நந்தலால் போஸ்

உலகின் மிகப்பெரிய திரையரங்கம் - நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்

திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் - 114

உலக மனித உரிமைகள் சட்டம் ஐ.நா.சபையால் இயற்றப்பட்ட வருடம் - 1948

உலகின் மிகப்பெரிய சிலை - அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை

புதுதில்லியை வடிவமைத்து உருவாக்கியவர் - சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர்

உலகில் முதன் முதலில் மறுமலர்ச்சி தோன்றிய நாடு - இத்தாலி

முதன் முதலில் தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய நாடு - டென்மார்க்

ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் உள்ள இடம் - இங்கிலாந்து

ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு - 6 லிட்டர்

தலைமுடியின் கருமை நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள மெலனின் என்ற பொருள்.

மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள இடம் - ஆஸ்திரேலியா

இந்தியாவில் முதல் பெண்கள் காவல்நிலையம் தொடங்கப்பட்ட மாநிலம் - கேரளா

மோகினியாட்டம் என்னும் நடன வகைக்குப் புகழ்பெற்ற இந்திய மாநிலம் - கேரளா

அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் உள்ள இடம் - ஜெனீவா

ஐக்கிய நாடுகள் டபை செயலாளரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

பந்த் நடத்துவதை முதன் முதலில் தடை செய்த மாநிலம் - கேரளா

தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி - தெலுங்கு

ஐ.என்.எஸ். ராஜாளி கப்பல் படைத்தளம் எங்கு அமைந்துள்ளது - அரக்கோணம்

கட்டாயக் கல்வித் திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம் - தமிழ்நாடு

மைக் விட்னி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் - கிரிக்கெட்

இந்தியாவின் மிக நீண்ட இதிகாசம் - மகாபாரதம்

அடகாமா பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது - சிலி

சீனக் குடியரசின் முதல் தலைவர் - சன்யாட்சென்

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் - மிகிர் சென்

இந்தியாவின் ஹாலிவுட் நகரம் என்று வர்ணிக்கப்படுவது - மும்பை

உலக தொலை தொடர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 17

ஆதாரம் : மனித நேய அறக்கட்டளை