அடிப்படை சட்டக்கூறும் அதன் கோட்பாடும்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுக் கூறு 320 (3) (அ) & (ஆ) இன்படி அரசுப் பணியிடங்களில் பணியாளர்கள் பணியமர்த்தும் முறை, பணியமர்த்தல், பதவி உயர்வு, பணி மாறுதல் ஆகிய இனங்களில் பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை கொள்கைகள் தொடர்பாக தேர்வாணையத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

அரசுத் துறையில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான விதிகளை உருவாக்குவதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்குமான அரசின் கருத்துருக்களை ஆய்வு செய்தல்

பெறப்பட்ட கருத்துருவின் மீது தேர்வாணையத்தின் கருத்தினைப் பெற்று அரசுக்கு தெரிவித்தல்.

தேர்வாணையக் கருத்திற்கு மாறுபாடுகள் ஏதும் இருந்தால் ஆண்டு அறிக்கையில் அதை தெரிவித்தல்.

தேவையான நேர்வுகளில் விதிகளில் திருத்தம் செய்ய அரசுத் துறைகளுக்கு பரிந்துரைத்தல். திட்ட அட்டவணைப்படி காலிப் பணியிட மதிப்பீடுகள் பெறப்படுதலைக் கவனித்தல்.

பெறப்பட்ட காலிப் பணியிட மதிப்பீட்டறிக்கையின் மீது அப்பதவிக்கான விதிமுறைகளின் அடிப்படையில் அறிவிக்கை தயாரித்தல்.

குறைபாடுகள் ஏதும் இருப்பின், அது தொடர்பாக அரசு மற்றும் துறைத் தலைவர்களிடம் தகவல் கோருதல்.

தேர்வாணைய ஆணைக்குப் பின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை | விளம்பரங்கள் வெளியிடுதல்.

செயல்முறைத் திட்டத்திற்கான அரசாணை, பாடத்திட்டம் மற்றும் மருத்துவ உடற்தகுதி குறித்த சான்றிதழ் பெறுவதற்கான அரசாணைகளுக்கு திருத்தங்கள் வெளியிட நடவடிக்கை எடுத்தல்.

பல்வேறு பதவிகளுக்கான பாடத்திட்டங்கள் தயாரித்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.

இணைக்கல்வித் தகுதிக்கான குறிப்புகள் தயாரித்தல், குழுவை கூட்டுதல் குழுவின் அறிக்கையை அரசிற்கு அனுப்புதல் அரசாணை வெளியிடுவதை கவனித்தல்.

பல்வேறு பதவிகளுக்கான தெரிவு திட்ட முறைகளுக்கு தேவைக்கேற்ப திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.

கேள்வி பதில்

1. எழுத்துத் தேர்வு மற்றும் நேர் காணல் தேர்வு இரண்டிலும் கலந்து கொள்ள வேண்டுமா?

ஆம்.

2. தேர்வுகளில் நான் பெற்ற மதிப்பெண்களை எவ்வாறு தெரிந்து கொள்வது?

நேர்காணல் தேர்வில் பங்கு பெற்ற விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும். நேர்காணல் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள். அக்குறிப்பிட்ட பதவிக்கான நேர்காணல் தேர்வுகள் நடைபெறும் நாட்களின் கடைசி நாளன்று மாலையோ அதற்கு அடுத்த வேலை நாளன்றோ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும், இம்மதிப்பெண்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும்.

3. தேர்வாணையத்தால் தெரிந்தெடுக்கப்பட்ட நபருக்கு அப்பதவியில் நியமிக்கப்படுவதற்கான உத்திரவாதம் உண்டா?

இல்லை.

4. நான் இடஒதுக்கீட்டு வகுப்பைச் சார்ந்தவன், நான் பொது முறைகளில் மு்லம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் தெரிவு பெற இயலுமா?

இயலும்.

5. தெரிவுப் பட்டியல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு இடஒதுக்கீட்டு பிரிவின் கீழும் போதுமான அளவு விண்ணப்பதாரர்கள் தரவரிசைப் பட்டியலிலிருந்து (Ranking List) தெரிவு செய்யப்பட்டு, அவ்விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் வேலை முறைப் பட்டியலில் (Roster) உள்ள இன சுழற்சி முறை (Turn) க்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் வரிசைப்படுத்தப்பட்டு தெரிவுப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

6. நான் இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சார்ந்தவன். நான் பொது முறைகளின் (General Turn) மூலம் நிரப்பப்படும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் தெரிவு பெற இயலுமா?

ஆம்.

இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களும் பொது முறைகளின் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களுக்குத் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாவர்.

7. இரண்டு (அல்லது) இரண்டிற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெறும் நிகழ்வில் எவ்வாறு தெரிவு இறுதி செய்யப்படுகிறது?

இரண்டு (அல்லது) இரண்டிற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெறும் நிகழ்வில் வயதில் மூத்தவர் முன்னிலை பெறுவார்.

வயதும் சமமாக இருப்பின், அவர்களில் எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் முன்னிலை பெறுவார்.

எழுத்துத் தேர்விலும் சமமான மதிப்பெண்கள் பெற்றிருப்பின், இணைய வழி விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட வரிசையின் அடிப்படையில் முன்னிலை பெறுவர்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்