திறன்மிக்க தொழிலாளர் தேவை மற்றும் விநியோகத்தில் உள்ள இடைவெளியை நிரப்பவும் தகவல் பரவலை மேம்படுத்தவும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஆத்மநிர்பர் ஸ்கில்ட் எம்ப்லாயீ எம்ப்லாயர் மேப்பிங் (அசீம்) [Aatamanirbhar Skilled Employee Employer Mapping (ASEEM)] என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த வலைதளத்தைத் தொடங்கியுள்ளது. அசீம் (ASEEM) வலைதளத்தின் நன்மைகள் விரைவாக மாறிவரும் வேலையின் தன்மை மற்றும் அது எவ்வாறு பணியாளர்களை பாதிக்கிறது ஆகியவற்றை கண்டறிந்து மறுசீரமைப்பது மிகவும் முக்கியமானதாகும். தொழில் சார்ந்த உரிய திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், திறன்மிக்க ஊழியர்கள் தங்களது நீடித்த வாழ்வாதாரத்தைக் கண்டறியவும் அசீம் வலைதளம் உதவும். திறன்மிக்க தொழிலாளர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், பலன் சார்ந்த திறன்மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான சிறந்த உபகரணங்களையும், நடைமுறைகளையும், கொண்டு வருவதில் உதவும் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு மேலாண்மையைப் பயன்படுத்துவது போன்ற திறன் மேம்பாட்டுக்கு செயல்படுத்தக் கூடிய பல்வேறு திட்டங்களில் நெருங்கிய ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவதை உறுதிசெய்யும். தரவுகள் இரட்டிப்பு இருந்தால் அதனைக் கண்காணிக்கவும், நாட்டில் தொழில் பயிற்சி வடிவமைப்பை மாற்றியமைக்கவும், திறன், மேம்பட்ட திறன், மறுதிறன் ஆகியவற்றை கூடுதல் அமைப்பு உருவாக்கத்தின் மூலம் உறுதி செய்யவும் இது உதவும். மேலும், நாட்டின் இளைஞர்களுக்கு அளவில்லாத வேலைவாய்ப்புகளை இது அளிக்கும். குறிப்பாக கோவிட்டுக்குப் பிந்தைய காலத்தில், திறன்மிக்க தொழிலாளர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கி இந்தியாவின் மீட்புப் பயணத்தை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். முக்கிய அம்சங்கள் திறமையான தொழிலாளர்களை அவர்கள் தகுதிக்கேற்ற வேலை வழங்கும் நிறுவனத்துடன் இணைக்கும் ஒரு உபகரணமாக அசீம் செயல்படும். வேலை தேடுவோர் மற்றும் வேலை வழங்குபவர்கள் அசீம் வலைதளம் அல்லது அசீம் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். தொழில்துறைத் தேவை, திறன் இடைவெளி ஆய்வு, மாவட்டம் / மாநிலம் / தொகுப்பு அளவில் தேவை, முக்கிய தொழிலாளர் விநியோகஸ்தர்கள், முக்கிய நுகர்வோர், புலம் பெயர்ப்பு முறை, பன்னோக்கு ஆற்றல் வாய்ப்புகள் உள்பட தேவைகள் பற்றிய ஆய்வுமுறைகளைக் கொண்ட சரியான தரவுகளை உடனுக்குடன் தேசியத் திறன்மேம்பாட்டுக் கழகத்துக்கு அசீம் வழங்கும். அசீம் வலைதளத்தில் உள்ள மூன்று ஐடி (IT) சார்ந்த உள்ளடக்கங்கள்: உரிமையாளர்கள் தளம் - உரிமையாளர் ஆன்போர்டிங், தேவைத் திரட்டு, விண்ணப்பதாரர் தேர்வு டேஷ்போர்டு - அறிக்கைகள், போக்குகள், ஆய்வுகள், இடைவெளி சிறப்புக்கூறு பணிக்கு விண்ணப்பம் - உருவாக்குதல், விண்ணப்பதாரர் பற்றிய தகவலை ஆய்வு செய்தல், வேலைவாய்ப்பு ஆலோசனையைப் பகிர்ந்து கொள்ளுதல் தொழிலாளர்கள்: மாறும் சூழலுக்கு ஏற்ப திறமைகளை மாற்றியமைத்துக் கொள்வது தொழிலகப் பணியாளர்களுக்கு மிகவும் முக்கியமாகும். தொழிலாளர்கள் தங்கள் தகவல்களைப் பதிவு செய்வதற்கு வலைதளத்திலும், செயலியிலும் வசதி உள்ளது. தொழிலாளர்கள் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதுடன், அருகாமையில் உள்ள வேலைவாய்ப்புகளைத் தேடவும் முடியும். முதலாளிகள்: போட்டி நிறைந்த வர்த்தகத் துறையில் பொருளாதார வளர்ச்சி பெற்று வெற்றியடைய திறன்மிக்க தொழிலாளர்களை பணியமர்த்துவது மிகவும் அவசியம். துறைகளில் முக்கிய திறன்களை அடையாளம் காணுவதுடன், உலகத்தில் நடைமுறையில் உள்ள சிறந்த முறைகளை வழங்கும் வகையில், நிறுவன உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான திறன்மிக்க ஊழியர்களைத் தேர்வு செய்யும் வழிமுறைகளை வகுப்பதற்கு அசீம் பயன்படும். தொழிலாளர் சந்தை குறித்த ஆய்வு, தரவுகள், போக்குகள் ஆகியவற்றை அசீம் வழங்கும். அசீம் மூலம், வேலை தருவோர், முகமைகள், பணி திரட்டுபவர்கள் தாங்கள் தேடும் குறிப்பிட்ட பிரிவுக்கான திறன்மிக்க தொழிலாளர்களின் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க முடியும். கொள்கை வகுப்பாளர்கள்: கொள்கை வகுப்பாளர்கள் பல்வேறு துறைகள் பற்றி அறிந்துகொள்ளவும் அசீம் வழிவகுக்கும். ஆதாரம்: அசீம் வலைதளம், பத்திரிக்கை தகவல் மையம்