கல்வியில் செயற்கை நுண்ணறிவு - உலகளவிலான தலைமைத்துவத்திற்கு இந்தியாவின் திறமைக்கான வழிகாட்டியை உருவாக்குதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், விரைவான வளர்ச்சியுடன் உலகின் சக்தி மையமாக இந்தியா நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 2024 - ம் ஆண்டில், புத்தொழில் நிறுவனங்களில் 89% செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன. மேலும் 87% நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்திய செயற்கை நுண்ணறிவு சந்தையின் வளர்ச்சி விகிதம், வரும் 2027 - ம் ஆண்டு வரை 25%-35% என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், 2024 ம் ஆண்டில் அதற்கான திறன் சார்ந்த குழுவைக் கொண்டுள்ள இந்தியாவிற்கு, 2027 ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதம் 15% மாகவும், 1.25 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முறை சார்ந்த நிபுணர்கள் தேவை என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு முன் முயற்சிகள் மற்றும் கொள்கைகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் சந்தையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்கான தீர்வுகளை வழங்குகின்றன. தேசிய கல்விக் கொள்கை 2020, பொருளாதார வளர்ச்சி, கல்வித் துறையில் உள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பது, ஆசிரியர் திறன்களை மேம்படுத்துவது மற்றும் தனித்துவ கற்றல் நடைமுறைகளை மேம்படுத்துவது போன்ற அம்சங்களில் செயக்கை நுண்ணறிவுத் திறனை அங்கீகரிக்கிறது. மேலும் அனைத்து கல்வி நிலைகளிலும் செயக்கை நுண்ணறிவு சார்ந்த கற்றலின் முக்கியத்துவத்தை இந்தக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இந்தியா செயக்கை நுண்ணறிவு இயக்கம் (2024, மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது) அரசுத் துறைகள், நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் கல்வித்துறை போன்ற துறைகளில் புதுமைக் கண்டுபிடிப்புகளை வளர்ப்பதன் மூலம்,செயக்கை நுண்ணறிவில், உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உத்தியை மையமாகக் கொண்டு,தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், ஜிட்டல் தளங்கள் தொலைதூர கிராமப்புறப் பகுதிகள், பழங்குடியினப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய சமூகங்களை சென்றடைவதை அடைவதை உறுதிசெய்து, டிஜிட்டல் பாகுபாட்டைக் குறைக்கிறது. இந்த விரிவான செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக நிலைநிறுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு, மாபெரும் தரவு தொகுப்புகள் மற்றும் எந்திரக் கற்றல் தொழிலாளர் சந்தைகளை மாற்றுவதுடன், புதுமைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை தேசிய கல்விக் கொள்கை உதவிகரமாக உள்ளது. இளைஞர்கள் இந்த மகத்தான மாற்றங்களைச் சமாளிக்க முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில், பன்முகக் கல்விக்கான பிற பாடநெறிகளுடன் செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல் / தரவு அறிவியல் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பொருளாதாரம் சார்ந்த தொழில்முறை வெற்றிக்கும், அதிக வாய்ப்புகளுக்கும் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234853®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும்.