மனிதனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் (IIT Madras Pravartak Technologies Foundation), மனிதனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள மனித ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளது. தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவுவது உள்ளிட்டவை இந்த மையத்தின் செயல்பாடுகளில் அடங்கும். செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு என்பது கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் முக்கிய கவலையாகும். கட்டுப்பாடுகளுக்கும் புதுமைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்று. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும். இம்மையத்தின் தாய் அமைப்பான ஐஐடி-எம் பிரவர்த்தக், மாண்புமிகு உச்சநீதிமன்றம், இந்திய நாடாளுமன்றம் (சன்சத் டிவி வழியாக), இந்திய ராணுவம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டப் பணிகளில் இந்த மையம் பணியாற்றி வருகிறது. மையத்தின் நோக்கம் இம்மையத்தின் நோக்கம் பின்வரும் மூன்று பரிமாணங்களை மையமாகக் கொண்டிருக்கும். மனித ஆற்றலை மேம்படுத்துதல் மக்களைப் பாதுகாத்தல் கலாச்சாரம் - பாரம்பரியத்தின் மூலம் பொதிந்துள்ள சமூக மதிப்பைப் பெருக்குதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சில முக்கிய பகுதிகள் மொழி மாதிரிகள்: சிறிய, டொமைன் பற்றிய, சூழல்சார் தரவுத் தொகுப்புகளுக்கு பொருத்தமான சிறய மொழி மாதிரிகள் குறித்து கவனம் செலுத்தப்படும் மொழிகள்: பொதுவாக ஆங்கிலம் அல்லாத- குறிப்பாக இந்திய மொழிகள்- உள்நாட்டு அளவில் தொடங்க உதவிகரமாக இருந்தாலும், இறுதியில் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. பொறுப்பான, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு: தனியுரிமை, சார்புகள், நெறிமுறைக் கருத்தாய்வுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கவனம் செலுத்தும். பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மீதான இந்த முக்கியத்துவம் எங்களின் தீர்வுகள் புதுமையானதாகவும், நெறிமுறை சார்ந்த்தாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதை, உறுதி செய்யும். செயற்கை நுண்ணறிவில் திறன் மேம்பாடு நாடு முழுவதும் உள்ள மாணாக்கர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் மற்றும் தீர்வுகளில் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த மையம் வாய்ப்பாக அமையும். ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள மாணவ-மாணவிகள் தங்களின் இளங்கலை, முதுகலை, பிஎச்டி ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் போன்றவைகளை இம்மையத்தின் வழிகாட்டுதலுடன் தொடரலாம். செயற்கை நுண்ணறிவில் திறமை படைத்தவர்களுக்கு தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும். பயன்பாட்டு டொமைன்கள் கல்வி, சுகாதாரம், நிதிச் சேவைகள், போக்குவரத்து, சட்டப்பூர்வ பரிசீலனைகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் மனித ஆற்றலை மேம்படுத்த முடியும். விண்ணப்பங்களில் இணையப் பாதுகாப்பு, இணைய மோசடி மற்றும் தவறான தகவல் பாதுகாப்பு போன்ற குடிமக்களைப் பாதுகாக்கும் அம்சங்கள் இடம்பெறும். ஜனநாயகத்தை வலுப்படுத்த இத்தகைய பயன்பாடுகள் முக்கியமானதாக இருக்கும். கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்காக, செயற்கை நுண்ணறிவு போன்ற கருவிகளின் உதவியுடன் நமது செழிப்புமிக்க கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், பரவலாகப் பகிர்ந்து கொள்ளவும் முடியும் என நம்புகிறோம். ஐஐடி-எம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் என்பது சென்சார்கள், நெட்வொர்க்கிங், ஆக்சுவேட்டர்ஸ் அண்ட் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் போன்றவைகளில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தை உள்ளடக்கிய செக்சன்-8 நிறுவனமாகும். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் சைபர்-ஃபிசிக்கல் சிஸ்டம்ஸ் தொடர்பான பல்துறை தேசிய இயக்கத்தின் கீழ் இதற்கு நிதியுதவி வழங்கப்பட்டு, ஐஐடி மெட்ராஸ் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்