தொல்லியல் துறையின் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதற்கான நடைமுறைகள் இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்த பிறகு சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த, அறிக்கை வெளியிடுவதற்கு ஏற்றதா என்பதையும், அந்த அறிக்கை நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதையும் உறுதிசெய்ய, நிபுணர்கள் அதை சரிபார்க்கும் நடைமுறை உள்ளது. தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக ஆய்வு அதிகாரியின் தகவல்களின்படி அறிக்கையை மேம்படுத்தும் செயல்முறை உள்ளது. அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை சமர்ப்பித்தல், ஆய்வு செய்தல் மற்றும் வெளியிடுதல் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்த செயல்முறைகளைக் கொண்டவை, முந்தைய கட்டம் நிறைவடைந்ததும் அடுத்த கட்டப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிக்கலான தன்மைகளைப் பொறுத்து காலக்கெடு மாறுபடலாம். ஆனால் முழு செயல்முறையும் திறன் வாய்ந்ததாகவும் தேவையற்ற தாமதமின்றியும் நடைபெறுவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறிக்கை சமர்ப்பித்தல் என்பது அகழ்வாராய்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அறிக்கையை சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் ஊழியர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படுகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்