உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறிய ரக எரிவாயு எந்திரங்கள் விமானங்களுக்கு மேம்பட்ட உந்து விசையளிக்கும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையாகத் தேசிய விண்வெளி ஆய்வகம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று சிறிய ரக எரிவாயு எந்திரங்களை (Indigenous Micro and Small Gas Turbine Engines) அறிமுகப்படுத்தியுள்ளது. இவை முறையே 5 கிலோ, 50 கிலோ, 100 கிலோ உந்து விசை திறன் கொண்ட எந்திரங்களாகும் (NJ-05 with 5 kg thrust, NJ-50 with 50 kg thrust and NJ-100 with 100 kg thrust). உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறிய அளவிலான எந்திர அமைப்புகள் ஆளில்லா விமானங்கள் [Unmanned Aerial Vehicles (UAVs)] மற்றும் இடைமறித்து தாக்கும் ட்ரோன்கள், சிறிய ரக ஏவுகணைகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303065®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்