மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் [Ministry of Electronics and Information Technology (MeitY)] ஆதரவோடு செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் காற்றின் தரத்தை கண்காணிக்கும் அமைப்புமுறைக்கான தொழில்நுட்பம் [Air Quality Monitoring System (AI-AQMS v1.0)] உருவாக்கப்பட்டுள்ளளது. டெக்ஸ்மின், ஐஎஸ்எம் [Technology Innovation in Exploration & Mining Foundation (TEXMiN) IIT (ISM) Dhanbad] உடன் இணைந்து வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தேசிய திட்டத்தின் [National programme on Electronics and ICT applications in Agriculture and Environment (AgriEnIcs)] கீழ் கொல்கத்தாவில் உள்ள நவீன கணினி மேம்பாட்டு மையம் [Centre for Development of Advanced Computing (C-DAC), Kolkata], சுற்றுச்சூழல் மாசை கண்காணிக்கும் வகையில் வெளிப்புறக் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் நிலையத்தை (Outdoor Air Quality Monitoring Station) வடிவமைத்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கி சுரங்கம் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்