எடை குறைந்த சக்கர நாற்காலி சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), ‘ஒய்டி ஒன்’ என்ற சக்கர நாற்காலியை உருவாக்கி அதை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் எடை குறைந்த சக்கர நாற்காலி இது என ஐஐடி கூறியுள்ளது. இந்த ஒற்றை குழாய் திட அமைப்பு (‘மோனோ-டியூப் ரிஜிட் ஃபிரேம்’) சக்கர நாற்காலி உள்நாட்டிலேயே துல்லியமாகக் கட்டமைக்கப்பட்டதாகும். சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட ‘ஒய்டி ஒன்’, பயனாளிகளின் உடல் அமைப்புக்கும், அவர்களின் தினசரி செயல்பாட்டுத் தேவைகளுக்கும் ஏற்ப வடிவமக்கப்பட்டுள்ளது. 9 கிலோகிராம் எடை மட்டுமே கொண்ட இந்த சக்கர நாற்காலி, அதிகபட்ச வலிமையையும், திறனையும் கொண்டதாகும். கார்கள், ஆட்டோக்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் இதை கையாளுதல் மிக எளிதாக இருக்கும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்