பண்டைய பருவநிலை மாற்றங்களின் பதிவுகள் சந்த் கபீர் நகரில் உள்ள பக்கீரா ஏரிக்குக் (Bakhira Lake Sediments in Sant Kabir Nagar) கீழே உள்ள வண்டல்களில் 25,000 ஆண்டுகளாகக் குவிந்துள்ள காந்தத் தாதுக்களை அளவிட்ட ஒரு புதிய ஆய்வு, கடந்த கால பருவநிலை மாற்றங்களையும், அவை வட இந்தியாவில் மழைப்பொழிவு, வானிலைச் சிதைவு, வண்டல் போக்குவரத்து, ஏரி செயல்முறைகள் ஆகியவற்றை எவ்வாறு பாதித்துள்ளன என்பதையும் கண்டறிய உதவியுள்ளது. எதிர்காலப் பருவநிலையை அறிய உதவும் ஆய்வு எதிர்காலப் பருவமழையின் போக்கைக் கணிக்க மேம்பட்ட பருவநிலை மாதிரிகளுக்கு இது வழிவகுப்பதோடு, பக்கிரா ஏரி ஒரு அங்கமாக உள்ள மத்திய கங்கைச் சமவெளியில் சிறந்த நீர் வள மேலாண்மைக்கும் உதவக்கூடும். மத்திய கங்கைச் சமவெளியின் முக்கியத்துவம் மத்திய கங்கைச் சமவெளி (Central Ganga Plain), கோடை பருவமழையால் பாதிக்கப்படும் மிக முக்கியமான பிராந்தியங்களில் ஒன்றாகும். மேலும் இது விவசாய நடைமுறைகளின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆய்வின் முக்கிய முடிவுகள் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஒரு தன்னாட்சி நிறுவனமான பிர் பல் சாஹ்னி தொல்லுயிரியல் நிறுவனத்தின் [Birbal Sahni Institute of Palaeosciences (BSIP)] ஆராய்ச்சியாளர்கள், பக்கீரா ஏரியின் வண்டல்களை ஆராய்ந்தனர். அதன் அடிப்படையில் இந்த தகவல்கள் கிடைத்தன. பருவநிலை மாதிரிகளை மேம்படுத்துவதற்கும், எதிர்காலப் பருவமழையின் போக்கைக் கணிப்பதற்கும், மாறிவரும் மழைப்பொழிவு முறைகளுக்கு ஏற்ப ஆறு, ஏரி அமைப்புகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்த ஆய்வுத் தகவல்கள் மதிப்புமிக்க அடிப்படைத் தகவல்களை வழங்குகின்றன. வெளியீட்டு இணைப்பு: https://doi.org/10.1016/j.palaeo.2026.114028 மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2308732®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்