அனைவரையும் உள்ளடக்கிய உயர்கல்வி கற்றல் குறைபாடுள்ள மாணவர்களும் சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களும் பிற மாணவர்களுடன் ஒரே பள்ளியில் சேர்ந்து கல்வியைப் பெறுவதற்கான இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தும் ஓர் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை உள்ளடக்கிய கல்வி. இக்கல்வி முறையே சகிப்புத்தன்மை கொண்ட சமூகத்தை உருவாக்க வழி செய்யும். 157158 சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் போன்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டில் உள்ளடக்கிய கல்வியை எட்டுவதற்காகச் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் தனி கவனம் செலுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகளால் பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவர்களும் உயர்கல்வி கற்று, வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்கள் பாடப்புத்தகங்கள் மடிக்கணினி உட்பட பொருள்கள் வழங்குவதற்கும் தனி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (Diploma) டிப்ளமோ பட்டப்படிப்புகளைப் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு சக்ஸம் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். விவரங்களுக்கு: www.aicte-pragati-saksham-gov.in ஒன்றிய அரசின் உதவித்தொகை ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷன் (NHFDC) சார்பில் டிரஸ்ட் ஃபண்ட், நேஷனல் ஃபண்ட் ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விவரங்களுக்கு: www.nhfdc.nic.in ஆதாரம்: நான் முதல்வன்