என்ஜினியரிங் மாணவிகளுக்குப் பிரகதி கல்வி உதவித்தொகை குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாக இருந்து பொறியியல் தொழில்நுட்ப டிப்ளமோ, பொறியியல் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் உதவித்தொகை வழங்குகிறது. விவரங்களுக்கு: www.aicte-pragati-saksham-gov.in +2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை வருவாய் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, படிப்பில் சிறந்த மாணவர்கள், கல்லூரியில் பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல், வணிகவியல் உள்பட பல்வேறு இளநிலைப் பட்டப்படிப்புகளில் படிக்க ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம், கல்வி உதவித்தொகையை வழங்குகிறது. விவரங்களுக்கு: www.scholarships.gov.in அறிவியல் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப் படிப்பிலோ அல்லது ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பிலோ சேரும் மாணவர்களுக்கு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, கிஷோர் விக்யானிக் புரோத் சஹான் யோஜனா (KVPY) திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காகத் தனியே தேர்வு எழுதவேண்டும். விவரங்களுக்கு: www.kvpy.iisc.ernet.in அறிவியல் பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மூன்று ஆண்டு பி.எஸ்சி., பி.எஸ்சி. (ஆனர்ஸ்) படிப்புகள், நான்கு ஆண்டு பி.எஸ். படிப்பு, ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., எம்.எஸ். படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை, இன்ஸ்பையர் [Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)] கல்வி உதவித்தொகை திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. விவரங்களுக்கு: www.online-inspire.gov.in தொழிலாளர் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை மாத வருமானம் ரூ. 10 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள பீடித் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. மாதம் ரூ. 8 ஆயிரத்துக்குக் குறைவான வருமானம் உள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு: www.scholarships.gov.in ஆதாரம்: நான் முதல்வன்