ஆசிரியர்களுக்கான குறிப்புகள் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறி ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும். தேர்வைக் கண்டு பயப்படாமல் எந்தப் பதற்றமும் இல்லாமல் தேர்வை அணுகுவது எப்படி என்பதை மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். தேர்வு நேரங்களில் உடல்நலத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை எடுத்துக் கூறி மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். தேர்வு அறை நடைமுறைகளை, அதற்கான காரணங்களுடன் மாணவர்களுக்கு விளக்கிக் கூறிப் புரிய வைக்கவேண்டும். ஆதாரம்: நான் முதல்வன்