கட்டணமில்லா இணையவழி கணிதப் பாடவகுப்பு புதிய கண்டுபிடிப்பு சிந்தனையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் [Indian Institute of Technology Madras (IIT Madras)] கணிதப் பாட வகுப்புகளை தொடங்கவுள்ளது. சென்னை ஐஐடி ப்ரவர்த்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை மூலம் கட்டணமில்லாமல் இணையவழி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இணையவழி இறுதித் தேர்வு நடத்தப்படும். இந்த வகுப்புகள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள் https://iitmpravartak.org.in/out-of-box-thinking என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளவேண்டும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்