அரசுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி "நான் முதல்வன்" திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசுத் தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளிக்கப்படவுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 07.03.2023 அன்று காலை 10 மணியளவில் இத்திட்டம் துவங்கப்படவுள்ளது. இப்போட்டித் தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் போட்டித் தேர்வு பிரிவு துவங்கப்படவுள்ளது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9