என்எஃப்எஸ்சி திட்டத்தின் நிதியுதவி மூலம் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பு பொருளாதார நெருக்கடி உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகங்கள், ஆராய்ச்சிக்கான செலவுகள் பெரும் தடையாக உள்ளன. இத்தகைய தடைகளைக் களையும் வகையில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பட்டியலின மாணவர்களுக்கான தேசிய ஆய்வு உதவித்தொகைத் திட்டம் [National Fellowship for Scheduled Caste Students (NFSC) Scheme] செயல்படுத்தப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த 35 வயதான தருண் குமார், குடும்ப நிதி நெருக்கடி காரணமாக தனது முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். இந்நிலையில் 2017 ஜூலை மாதம் முதல் இவருக்கு இத்திட்டத்தின் கீழ் ஆய்வு உதவித்தொகை, வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டது. இந்த நிதி ஆதரவு மூலம் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், ஆராய்ச்சிக்கான செலவுகளைச் சமாளித்த அவர், தனது ஆராய்ச்சியில் முழுக்கவனம் செலுத்தி அதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். உரிய நேரத்தில் கிடைக்கும் நிதியுதவி எளிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க உதவும் என்பதற்கு இவரது கல்விப் பயணம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301617®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்