வறுமையிலும் உயர்கல்விக் கனவு அசாம் மாநிலம், உதல்குரி கிராமத்தை சேர்ந்தவர் அபினாஷ் மண்டல். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த இவர், தரமான உயர்கல்வி கற்க வேண்டும் என்ற ஆவல் உடையவராக இருந்தார். வணிகவியல் துறையில் சிறந்த விளக்க வேண்டும் என்றும், இத்துறையில் சிறந்த ஆசியராக விளங்க வேண்டும் என்றும் விரும்பினார். ஆனால் சமூக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்ததால் உயர்கல்வி கற்க பெரும் சாவல்களை எதிர்கொண்டார். கனவை நனவாக்கிய உதவித்தொகை இந்நிலையில், பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், 2020 முதல் 2024ம் ஆண்டு காலகட்டத்தில், அபினாஷ் மண்டலுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. இது அபினாஷ் மண்டல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் இளநிலை ஆராய்ச்சியாளர் பிரிவில் மாதம் 37 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைத்த நிலையில், அபினாஷ் மண்டல் முதுநிலை ஆராய்ச்சியாளராக உயர்ந்த பின் உதவிதொகையும் 42 ஆயிரமாக உயர்ந்தது. உயர்கல்வியால் உயர்ந்த வாழ்க்கை இதனால் பொருளாதார நெருக்கடி குறைந்த நிலையில், அபினாஷ் மண்டல், தனது ஆராய்ச்சி படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து முனைவர் பட்டம் பெற்ற அவர், சிறந்த ஆசிரியராக விளங்கினார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் புத்த கயா, ஐஐஎம் இந்தூர், ஐஐடி தில்லி ஆகியவற்றில் தனது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் விரிவுரையாளராக உள்ளார். பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகையால் சமூக பொருளாதாரத்தில் உயர்ந்த அபினாஷ் மண்டல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307348®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்