ஷெட்யூல்டு சமூகத்தினருக்கான தேசிய ஆய்வுக் கல்வி உதவித் தொகை திட்டம் உறுதிப்பாடு, உரியநேரத்தில் கிடைக்கும் ஆதரவு, வாய்ப்புகள் ஆகியவை ஆய்வாளர்கள் தங்கள் கல்விசார் லட்சியங்களை நம்பிக்கையுடன் தொடர்வதற்கு உதவுகின்றன. குறைந்த நடுத்தர வருமானம் உடைய குடும்பங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு முனைவர் பட்டப்படிப்பு, முறையான ஆராய்ச்சியில் முழு கவனத்துடன் ஈடுபடத் தேவையான நிதி நிலைத்தன்மையை ஷெட்யூல்டு சமூகத்தினருக்கான தேசிய ஆய்வுக் கல்வி உதவித் தொகை திட்டம் அளிக்கிறது. ஆராய்ச்சி லட்சியத்திற்கு வழிவகுத்த உதவித்தொகை தில்லியின் தென்கிழக்கு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஆய்வாளர் பாப்லி, இத்திட்டத்தின் நேர்மையான தாக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார். கல்வித்துறையில் ஒரு பணியை உருவாக்கவும், மதிப்புவாய்ந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடவும், அவர் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறார். இத்திட்டத்திற்கு முன்பு உதவி பெறுவதற்கு பாப்லி, தனது கல்விசார் இலக்குகளை அடைவதற்கு நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாப்லி, இத்திட்டத்தின் உதவிகளை பெறத் தொடங்கினார். அவர் ஆய்வு உதவித் தொகை, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்கான நிதி ஆகியவற்றுக்கு சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான உதவிகளை பெற்றார். இந்த ஆய்வு உதவித் தொகை நிதி நிவாரணத்தை அவருக்கு அளித்ததுடன் பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் சமூக சவால்களை எதிர்கொள்ளவும் உதவியது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2308642®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்