முனைவர் பட்டப் படிப்பு சவால்களிலிருந்து செமிகண்டக்டர் ஆராய்ச்சி வரை பட்டியல் பிரிவைச் சேர்ந்த 34 வயது ஆய்வாளர் திருமதி சங்கீதா தாஸ், பி டெக், எம். டெக் முடித்துவிட்டு தேசிய உதவித்தொகை திட்டத்தின் ஆதரவுடன் தனது முனைவர் பட்டப் படிப்பை வெற்றிகரமாகத் தொடர்ந்தார். தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருத்தல், பச்சிளம் குழந்தையைப் பராமரித்தல் போன்ற கடுமையான குடும்பச் சூழல்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். இத்திட்டத்தின் மூலம் அவர் மாதந்தோறும் ரூ.31,000 நிதியுதவி பெற்றார். பெரிய நிதிச் சுமையின்றி தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடர இது பெரிதும் உதவியது. தற்போது மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் 'சிப்ஸ் டூ ஸ்டார்ட் அப்' திட்டத்தில் திட்ட இணைப்பாளராகப் பணிபுரியும் இவர், செமிகண்டக்டர், சிப் வடிவமைப்புத் துறையில் தனது திறமையை வளர்த்து வருகிறார். கல்வி மற்றும் குடும்பச் சவால்களை மீறி விடாமுயற்சியுடன் சாதிக்க முடியும் என்பதற்கு இவரது பயணம் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300445®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்