திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகத்தில் 4 பாடப்பிரிவுகளுக்கு அனுமதி அண்மையில் தொடங்கப்பட்ட கூட்டுறவுக்கான திரிபுவன் கூட்டுறவு (சகாரி) பல்கலைக்கழகத்தில் (Tribhuvan Sahkari University) 4 பாடப்பிரிவுகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி பட்டயப் படிப்புகளில் 25 இடங்களுக்கும் இளநிலை படிப்புகளில் 30 இடங்களுக்கும் முதுநிலை படிப்புகளில் 583 இடங்களுக்கும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 10 இடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டு செயல்பாட்டின் போது இந்தப் பல்கலைக்கழகத்திலும் இதன் இணைப்பு கல்வி நிறுவனங்களிலும் சேர்த்து சுமார் 9,600 இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளும் 16,000 பட்டயப் படிப்புகளும் 60 முனைவர் பட்டப் படிப்புகளும் சுமார் 8 லட்சம் சான்றிதழ் படிப்புகளும் நிறைவடைந்திருக்கும். இந்தப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ரூ.500 கோடி மூலதன மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்