பேராசிரியர் உதவியுடன் கற்றல் (IIT-PAL) பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்வதற்கும், போட்டித் தேர்வுகளுக்கு சுயமாக படித்து சிறப்பாக தயார் செய்வதற்கும் உதவும் நோக்கத்துடன் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் (தற்பொழுது கல்வி அமைச்சகம்) உருவாக்கப்பட்டுள்ளது IIT-Professor Assisted Learning (IIT-PAL) என்னும் பேராசிரியர் உதவியுடன் கற்றல் முறை. இந்திய தொழில்நுட்பக் கழக பேராசிரியர்கள் மற்றும் பாட நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட காணொலி விரிவுரைகள் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யலாம். இந்த காணொலி விரிவுரைகள் ஸ்வயம் பிரபா (Swayam Prabha) சேனல்கள் மற்றும் தூர்தர்ஷன் DTH சேனல் 22-லும் ஒளிபரப்பப்படுகிறது. சிறப்பம்சங்கள் IIT பேராசிரியர்கள் குழுவால் நிர்வகிக்கப்படும் IIT PAL இணையதளம் பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது: NCERT பாடத்திட்டத்தின்படி பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களின் காணொலி விரிவுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் ஒவ்வொரு பாடங்களையும் படிப்படியாகக் கற்றுக் கொள்ளலாம். பதிவு செய்த மாணவர்கள் தங்களின் சந்தேகங்கள் / கேள்விகள் / சிக்கல்களை தலைப்பு வாரியான சமர்ப்பிக்கலாம். IIT PAL இல் உள்ள பேராசிரியர்கள் / நிபுணர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை இணையதளத்தில் வெளியிடுவார்கள். அதைப் பதிவு செய்த அனைத்து மாணவர்களும் பார்க்கலாம். குறிப்பிட்ட தலைப்புகளில் நேரடி கலந்துரையாடல் வேண்டும் என்று பதிவு செய்த மாணவர்கள் கோரிக்கை விடுக்கலாம். போதுமான கோரிக்கைகள் இருந்தால், நேரடி உரையாடல் அமர்வுகளின் அட்டவணை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு, பதிவு செய்யதுள்ள மாணவர்கள் நேரலை அமர்வில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்படும். ஆதாரம்: IIT-Professor Assisted Learning (IIT-PAL)