பி.எட். / முது நிலை மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026- 2027 ஆம் கல்வியாண்டிற்கான பி.எட் மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 19.06.2026 முதல் 21.07.2026 வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 31.07.2026 அன்று மாணாக்கர் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். 04.08.2026 முதல் 10.08.2026-க்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியை தேர்வு செய்யலாம். 14.08.2026 அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும். மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும். 24.08.2026 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் பி.எட் 2026-2027 சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. பி.எட். 2026-2027 சேர்க்கை தொடர்பான விவரங்கள் 1. அரசு கல்வியியல் கல்லூரிகள் 07 (900 இடங்கள்) அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள் 14 (1140 இடங்கள்) மொத்தம் 21 கல்வியியல் கல்லூரிகள் 21 (2040 இடங்கள்) 2. இணைய வழி விண்ணப்பம் 19.06.2026 முதல் 21.07.2026 வரை 3. தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள் 31.07.2026 4. விருப்பக் கல்லூரியை தேர்வு செய்யும் நாட்கள் 04.08.2026 முதல் 10.08.2026 வரை (7 நாட்கள்) 5. இட ஒதுக்கீடு ஆணை 14.08.2026 6. கல்லூரிகளில் சேரும் நாட்கள் 17.08.2026 முதல் 21.08.2026 வரை 7. வகுப்புகள் தொடக்கம் 24.08.2026 மேலும் 2026-2027 ஆம் கல்வியாண்டில் 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கை இடங்கள் 24,334 உள்ளன. இதற்கு மாணாக்கர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இன்று 19.06.2026 முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், 19.08.2026 முதல் அனைத்து முதுநிலை முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 2026-2027 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. முதுநிலைப் பாடப்பிரிவு 2026–2027 மாணாக்கர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் 1. விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணாக்கருக்கு ரூ.58/-பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும் SC/ST பிரிவுனருக்குப் பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும் விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. 2. விண்ணப்பம் பதிவு செய்யத் தொடக்க நாள் 19.06.2026 (வெள்ளிக்கிழமை) 3. விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 31.07.2026 (வெள்ளிக்கிழமை) 4. மாணாக்கர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் நாள் 04.08.2026 (செவ்வாய் கிழமை) 5. சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு நாட்கள் (மாற்றுத்திறனாளிகள் / விளையாட்டு வீரர்கள்/ முன்னாள் ராணுவத்தினர் / தேசிய மாணவர்படை / பாதுகாப்பு படைவீரர்கள்) 10.08.2026 (திங்கள் கிழமை) 6. கலந்தாய்வு நாட்கள் 13.08.2026 (வியாழக்கிழமை) முதல் 7. முதுநிலை முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் துவங்கும் நாள் 19.08.2026 (புதன் கிழமை) கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 மேலும் தகவல்களுக்கு செய்தி வெளியீடு எண்: 249 (18.06.2026) இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: செய்தி வெளியீடு எண்: 249 (18.06.2026)