NEST நுழைவுத்தேர்வு புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் [National Institute of Science Education and Research (NISER) Bhubaneswar] மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு நடுவம் [University of Mumbai - Department of Atomic Energy Centre for Excellence in Basic Sciences (UM-DAE CEBS) Mumbai] ஆகிய கல்வி நிறுவனங்களில் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளில் (5 Year Integrated M.Sc. Biological, Chemical, Mathematical and Physical Sciences) சேர National Entrance Screening Test (NEST) என்னும் கணினி வழி நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் சுமார் 120 நகரங்களில் நடத்தப்படுகிறது. உதவித்தொகை NISER Bhubaneswar அல்லது UM-DAE CEBS Mumbai கல்வி நிறுவனங்களில் சேரும் விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் அணுசக்தித் துறையின் திஷா திட்டத்தின் (DISHA Program of the Department of Atomic Energy, Government of India) கீழ் ஆண்டுக்கு ₹60000 கல்வி உதவித்தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள். கூடுதலாக, கோடைகால உள்ளிருப்புப் பயிற்சிகாக (Summer Internship) ஆண்டுக்கு ₹20000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. சிறப்புகள் NISER Bhubaneswar மற்றும் UM-DAE CEBS Mumbai கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தற்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் (PhD) படித்து வருகின்றனர். மேலும், இந்தக் கல்வி நிறுவனங்களில் பயின்று தலைசிறந்து விளங்கும் மாணவ/மாணவியர்கள் பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியில் [Bhabha Atomic Research Centre (BARC) Training School] சேர்வதற்கான நேர்காணலில் (interview) நேரடியாக கலந்து கொள்ளத் தகுதியுடையவர்கள். நுழைவுத்தேர்வுக்கான தகுதிகள் 2023 அல்லது 2024-ஆம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு (Class XII) முடித்தவர்களும், 2025-ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு (Class XII) தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளும் நடப்பு ஆண்டில் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பு (Class XII) தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். SC/ST/ Divyangjan விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். NEST 2025 தகுதி பட்டியலில் (NEST 2025 Merit List) இடம் பெற்றிருக்க வேண்டும். முக்கிய தேதிகள் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே மாதம் NEST தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் மாதம் முடிவுகள் வெளியாகும் தேதி: ஜூலை மாதம் தொடர்பு விவரங்கள் பதிவு, விண்ணப்பம், பணம் செலுத்துதல் போன்றவை தொடர்பான கேள்விகள்/புகார்களுக்கு பதிவு/உள்நுழைவுக்குப் பின் குறை தீர்க்கும் போர்ட்டலில் உதவி மையத்தைப் பயன்படுத்தவும் [Grievance Portal (Click 'Helpdesk') After Registration/Login] உதவி மையத் தொடர்பு எண்: 7996065888 [திங்கள்-சனி 09:00-18:00] தகவல் கையேடு மற்றும் பாடத்திட்டம் மற்றும் NEST பற்றிய பொதுவான தகவல்கள் பற்றிய கேள்விகளுக்கு மின்னஞ்சல்: nest-exam@niser.ac.in உதவி மையத் தொடர்பு எண்: 022-61306266 [திங்கள்-வெள்ளி 10:00-13:00 மற்றும் 15:00-17:00] National Entrance Screening Test (NEST) நுழைவுத்தேர்வு பற்றிய மேலும் தகவல்களுக்குwww.nestexam.in வலைத்தளத்தைப் பார்க்கவும். தொடர்புடைய இணைப்புகள் தகவல் கையேடு (Information Brochure) நிகழ்நிலை பதிவு (Online Registration) தேர்வு பாடத்திட்டம் (NEST Syllabus) முந்தைய வருட வினாத்தாள்கள்/பதில்கள் NISER புவனேஸ்வர் UM-DAE CEBS மும்பை ஆதாரம்: www.nestexam.in