ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகளில் (University Departments of Anna University, Chennai 600025) வழங்கப்படும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகளுக்கு (5 Year M.Sc. Integrated Degree Programmes) 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு நிகழ்நிலையில் (Online) மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வழங்கப்படும் பாடங்கள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 Year M.Sc. Integrated Degree Programmes) அண்ணா பல்கலைக்கழகத்தின் (கிண்டி பொறியியல் கல்லூரி வளாகம், சென்னை) பல்கலைக்கழகத் துறைகளில் சுயநிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த கணினி அறிவியல் (5 Year Integrated M.Sc. Computer Science) ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் (5 Year Integrated M.Sc. Information Technology) ஐந்தாண்டு ஒருங்கிணைந்த மின்னணு ஊடகம் (5 Year Integrated M.Sc. Electronic Media) விண்ணப்பிக்கத் தகுதிகள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த கணினி அறிவியல் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் குறைந்தபட்ச சராசரி மதிப்பெண்களுடன் (45% for OC 40% for BC/BCM/MBC & DNC/SC/SCA/ST) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பகுதி III இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பாடங்களில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய மூன்று பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த மின்னணு ஊடகம் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் குறைந்தபட்ச சராசரி மதிப்பெண்களுடன் (45% for OC 40% for BC/BCM/MBC & DNC/SC/SCA/ST) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பகுதி III இன் கீழ் ஏதாவதொரு பாடப் பிரிவில் (அறிவியல்/வணிகம்/கலை/பிற பிரிவுகள்) பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பு முறை ஐந்தாண்டு ஒருங்கிணைந்த கணினி அறிவியல் பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல் 100 மதிப்பெண்கள், வேதியியல் 100 மதிப்பெண்கள் மற்றும் கணிதம் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். தமிழ்நாடு வகுப்புவாரி இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த மின்னணு ஊடகம் பன்னிரண்டாம் வகுப்பில் பகுதி III (பகுதி I மொழி மற்றும் பகுதி II ஆங்கிலம் தவிர) பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். தமிழ்நாடு வகுப்புவாரி இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் http://cfa.annauniv.edu/cfa/ வலைத்தளம் மூலம் பதிவு செய்யலாம் விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2023 மேலும் தகவல்களுக்கு http://cfa.annauniv.edu/cfa/ வலைத்தளத்தைப் பார்க்கவும். தொடர்புடைய இணைப்புகள் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை அறிவிப்பு தகவல் கையேடு நிகழ்நிலை விண்ணப்பம் ஆதாரம்: https://cfa.annauniv.edu/cfa