இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் (Indian Institute of Creative Technologies) முதல் தொகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும்ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த நிறுவனம் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், விரிச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப துறைகளில் தொழில் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை தொடங்குகிறது. முதல் தொகுப்புக்கான தொடக்கக் கல்விச் சலுகையாக கேமிங்கில் ஆறு சிறப்பு படிப்புகளுக்கும் திரைப்பட போஸ்ட் புரொடக்ஷன் துறையில் 4 படிப்புகளும், ஆனிமேஷன் காமிக்ஸ் மற்றும் விரிச்சுவல் ரியாலிட்டி துறைகளில் 8 படிப்புகளும் இடம் பெற்றுள்ளன. வளர்ந்துவரும் படைப்பு தொழில்நுட்ப பிரிவில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதை உறுதிசெய்ய முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பாடத் திட்டங்கள் மிகவும் கவனமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டனைச் சேர்ந்த யார்க் பல்கலைக்கழகத்துடன் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சர்வதேச அளவிலான கூட்டு ஆராய்ச்சி, ஆசிரியர் பரிமாற்றம் உலகளாவிய சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. மேலும் கூகுள், யூடியூப், அடோப், மெட்டா, மைக்ரோ சாஃப்ட், என்விடியா, ஜியோ ஸ்டார் உள்ளிட்ட முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் நீண்ட கால ஒத்துழைப்பு வழங்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் உறுதி அளித்துள்ளன. அந்த நிறுவனங்களின் ஆதரவு மூலம் பாடத்திட்ட மேம்பாடு, உதவித் தொகை, பணிக்கால பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். உலகளவிலான தரநிலையை பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான பாடத்திட்டம் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு https://iicsindia.org/ இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்