சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (Diploma in Cooperative Management) தொடங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 13.09.2023 முதல் 22.09.2023 வரை www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை விடுதலின்றி அனைத்து கலங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 இணையதளம் மூலம் செலுத்தி சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அலுவலக நாள் மற்றும் நேரத்தில் நேரில் அல்லது பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இப்பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி +2 தேர்ச்சி ஆகும் மற்றும் 01.08.2023 அன்று 17 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இருபாலருக்கும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அரசு நிர்ணயித்துள்ள இடஒதுக்கீட்டின்படி சேர்க்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு பட்டயப் பயிற்சி ஓராண்டு 2 பருவ முறைகளாக ( முதல் பருவம் / 6 மாதம் / 5 பாடங்கள் + இரண்டாம் பருவம் / 6 மாதம் / 5 பாடங்கள்) நடத்தப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் மொத்தம் ரூ. 18750 ஆகும். மேலும் விவரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண். 215 பிரகாசம் சாலை பிராட்வே சென்னை 600 001 என்ற முகவரியிலோ அல்லது 044-25360041 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9