சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் (Tamilnadu Institute of Labour Studies, Chennai) பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்ட படிப்பு (B.A. Labour Management), எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்ட மேற்படிப்பு (M.A. Labour Management) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு [Post Graduate Diploma in Labour Administration (PGDLA)], தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் [Diploma in Labour Laws with Administrative Law (Weekend) ] நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகியபட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் இக்கல்வி நிலையத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. +2 முடித்த விருப்பமுள்ள மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும். விண்ணப்பங்கள் 21.04.2025 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு, பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட, பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்க இறுதி தேதி சென்னை பல்கலைக்கழக இளநிலை பட்ட படிப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 21.05.2025 விண்ணப்பக் கட்டணம் ₹200SC/ST ₹100(சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்) விண்ணப்பங்களைத் தபாலில் பெற, விண்ணப்பக் கட்டணத்திற்கான ₹200 (SC/ST ₹100) மற்றும் தபால் கட்டணம் ₹50க்கான வங்கி வரைவோலையினை "The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai" என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)முனைவர் இரா. ரமேஷ்குமார், இணைபேராசிரியர்Mobile No. 9884159410 தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ பின்புறம்) அம்பத்தூர், சென்னை 600 098044-29567885 / 29567886Email: tilschennai@tn.gov.in வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9