தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முனைவர்ப் பட்டப் படிப்பிற்குத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து பொது நுழைவுத் தேர்வுக்கான (Tamil University Research Programmes Common Entrance Test-TURCET) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வு முனைவர்ப் பட்டச் சேர்க்கைக்கான தகுதித் தேர்வாகும். விண்ணப்பதாரர்கள் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர்ப் பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் (Ph.D Regulations) மற்றும் முனைவர்ப் பட்ட நுழைவுத் தேர்விற்கான விவரக் கையேடு ஆகியவற்றைப் படித்துவிட்டு தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து முழுமையாகப் பூர்த்தி செய்து அனைத்து நகல்களையும் இணைத்து அஞ்சல் வழியாக இயக்குநர், கல்விநிலை ஆய்வு இயக்ககம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விதிவிலக்கு: தேசியத் தகுதித் தேர்வு (NET) மாநில அளவிலான தகுதித் தேர்வு (SET) அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான குழு- பல்கலைக்கழக நல்கைக் குழுவின் இளநிலைத் தகைமை (CSIR/UGC-JRF) முதலான தேர்வுகளில் தகுதி பெற்ற மாணவர்களுக்கும், அயலக மாணவர்களுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி முனைவர்ப் பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பெறும். பொது நுழைவுத் தேர்வுக்கான (TURCET) கால அட்டவணை முனைவர்ப் பட்ட நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவிறக்கம் தொடங்கும் நாள் : 19.02.2026 முனைவர்ப் பட்ட நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் : 06.03.2026 பொது நுழைவுத்தேர்வு நாள் : 15.03. 2026 கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்க தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்வளாகக்கல்வித் தேர்வுப்பிரிவுதமிழ்ப் பல்கலைக்கழகம்தஞ்சாவூர் – 613 010 04362-226720, 227151, coetamiluniv@gmail.com விண்ணப்பத்தை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர்ப் பட்ட நுழைவுத்தேர்விற்கான விண்ணப்பத்தை நிறைவு செய்யும் முன்னர் கீழ்க்காணும் வழிமுறைகளைப் படிக்கவும். விண்ணப்பத்தை நிறைவு செய்யும் முன்னர் உரிய கட்டணத்தை, தமிழ்ப் பல்கலைக்கழக இணையத்தின் வழியாக கீழ்க்காணும் வழிமுறைகளின்படி செலுத்தி அதற்கான இரசீதை PDF ஆக சேமித்து வைத்துக்கொள்ளவும். மேற்கண்ட இணைப்பைச் சொடுக்கி "online payment" என்பதை Click செய்து, Educational Instutions Click செய்யவும். பின்னர் Tamil Nadu ஐ தேர்வு செய்து, அதில் Tamil university ஐ தேர்வு செய்யவும் SBIயின் பணம் செலுத்தும் பக்கத்திற்குச் சென்ற பின்னர் Select Payment Categoryல் CAMPUS EDUCATION APPLICATION FEE என்ற பிரிவின்கீழ் தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுத்தும் (எ.கா.) முனைவர்ப் பட்டப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்(Ph.D). பிற தரவுகளை நிரப்பி பணத்தைச் செலுத்தவும். பணம் செலுத்தியதற்கான இரசீதைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும் முனைவர்பட்ட நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உட்பட அனைத்து விவரங்களையும் முழுமையாக நிறைவு செய்து அவ்விண்ணப்பத்தை இறுதி நாளுக்கு முன்பாக அஞ்சல் வழியாக அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களின் நகலைச் சொந்தக் கையொப்பம் (Self Attested) இட்டு இணைத்து இயக்குநர், கல்விநிலை ஆய்வு இயக்ககம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613010 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைத்தல் கூடாது. விண்ணப்பக் கட்டணங்கள் தவறுதலாக வேறு கணக்கில் செலுத்தப்பட்டாலோ, இரண்டு முறை செலுத்தினால் தொகை மீள வழங்கப்பட மாட்டாது முனைவர் பட்ட நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பத்தினை இறுதி செய்வது தொடர்பாக தமிழ்ப் பல்கலைக்கழகம் எடுக்கும் முடிவே இறுதியானது.