தேசிய பொது நுழைவுத் தேர்வு தேசிய பொது நுழைவுத் தேர்வு [National Common Entrance Test (NCET)] என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் [Ministry of Education (MoE), Government of India] பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் (Department of School Education & Literacy) கீழ் உள்ள இந்திய அரசாங்கத்தின் சட்டப்பூர்வ அமைப்பான [National Council for Teacher Education (NCTE)] சார்பாக தேசிய தேர்வு முகமை [National Testing Agency (NTA)] நடத்தும் கணினி அடிப்படையிலான (Computer-based test) தேசிய அளவிலான தேர்வாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் [4-Year Integrated Teacher Education Programme (ITEP)] சேர NCET தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் [Indian Institutes of Technology (IITs)] தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் [National Institutes of Technology (NITs)] மண்டல கல்வி நிறுவனங்கள் [Regional Institutes of Education (RIEs)] மத்திய / மாநில பல்கலைக்கழகங்கள் [Central/State Universities] விண்ணப்பிக்கத் தகுதிகள் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் 50% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்NCET தேர்வு எழுத, விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை. இருப்பினும், விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனம் / அரசு கல்லூரியின் வயது வரம்பை (ஏதேனும் இருந்தால்) பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்புக்கு மின்னஞல்: ncet@nta.ac.inதொலைபேசி எண்: 011-69227700, 011-40759000 மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in அல்லது https://exams.nta.ac.in/NCET/ வலைத்தளங்களைப் பார்க்கவும். ஆதாரம்: https://exams.nta.ac.in/NCET/