தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் [National Council of Educational Research and Training (NCERT)] பள்ளிக் கல்வியின் தரமான மேம்பாட்டிற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உதவவும் ஆலோசனை வழங்கவும் 1961ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மண்டலக் கல்வியியல் நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மண்டலக் கல்வியியல் நிறுவனங்கள் [Regional Institutes of Education (RIEs)] NCERT-யின் முக்கிய உறுப்பு அலகுகளாகும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிலுநர்களின் சேவைக்கு முந்தைய மற்றும் பணியிடைப் பயிற்சியை ஏற்பாடு செய்வதும், புதுமையான கல்வி நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கி பரப்புவதும் NCERT மற்றும் அதன் உறுப்பு அலகுகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். படிப்புகள் பி.ஏ. பி.எட். (4 ஆண்டுகள்) [B.A. B.Ed.] பி.எஸ்சி. பி.எட். (4 ஆண்டுகள்) [B.Sc.B.Ed. Physical Science] பி.எஸ்சி. பி.எட். (4 ஆண்டுகள்) [B.Sc.B.Ed. Biological Science] எம்.எஸ்சி. எட். (6 ஆண்டுகள்) [M.Sc.Ed.] புவனேஸ்வர் மற்றும் போபாலில் உள்ள மண்டலக் கல்வியியல் நிறுவனங்களில் சேர பொது நுழைவுத்தேர்வு [Common Entrance Examination (CEE)] நடத்தப்படும். விண்ணப்பிக்கத் தகுதிகள் பன்னிரெண்டாம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் (SC/ST/PwD பிரிவினருக்கு 5% மதிப்பெண்கள் தளர்வு) பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2021, 2022 இல் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 2023 இல் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ. பி.எட். விண்ணப்பிகத் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல்/வணிகவியல்/கலைப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி. பி.எட். விண்ணப்பிகத் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம்/புள்ளியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி. பி.எட். விண்ணப்பிகத் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/ பயோடெக்னாலஜியுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்சி. எட். விண்ணப்பிகத் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம்/புள்ளியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முக்கிய தேதிகள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2023CEE தேர்வு நாள்: 02.07.2023 CEE 2023 தரவரிசை CEE 2023 முதல் 60% வெயிட்டேஜ் மற்றும் தகுதித் தேர்வுக்கு 40% வெயிட்டேஜ் ஆகியவற்றுடன் தரவரிசைகள் உருவாக்கப்படும். தொடர்பு விபரங்கள் CEE 2023 உதவி மைய தொலைபேசி எண்கள் 0755-2661467/2661468மின்னஞ்சல் ncertcee2023help@gmail.com தொடர்புடைய இணைப்புகள் CEE 2023 மொபைல் செயலி தகவல் கையேடு (Information Brochure) நிகழ்நிலை பதிவு (Online Registration) தேர்வு பாடத்திட்டம் (CEE 2023 Syllabus) முந்தைய வருட வினாத்தாள்கள்/பதில்கள் ஆதாரம்: https://cee.ncert.gov.in/