புதிய உயிரி பொருளாதாரக் கொள்கையை வெளியிட்டது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம். பயோஇ3 (பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல்) கொள்கை உயிரி பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, வளர்ச்சியடைந்த பாரதம் 2047-க்கு முக்கியமானதாக இருக்கும். 'நிகர பூஜ்ஜியம்' கார்பன் பொருளாதாரம், மிஷன் லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) போன்ற மத்திய அரசின் தேசிய முயற்சிகளுடன் இணைந்த 'உயர் செயல்திறன் உயிரி உற்பத்தியை வளர்ப்பதை' இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயோஇ3 கொள்கை உணவு, எரிசக்தி, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். உயிரி அடிப்படையிலான ரசாயனங்கள் மற்றும் என்சைம்கள்; செயல்பாட்டு உணவுகள் மற்றும் ஸ்மார்ட் புரதங்கள்; துல்லியமான பயோதெரபியூடிக்ஸ்; பருவநிலை நெகிழ்திறன் கொண்ட விவசாயம்; கார்பன் பிடிப்பு மற்றும் அதன் பயன்பாடு; எதிர்கால கடல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி என ஆறு கருப்பொருள்களை கொண்டதாக உள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக தொழில்துறையை ஊக்குவித்து, பயோ இ3 கொள்கை அமலாக்கத்தின் உள்ளார்ந்த பகுதியாக அரசு-தனியார் பங்களிப்பு இருக்கும். 2014-ல் 10 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 2024-ல் 130 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2030-ம் ஆண்டில் 300 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்