மின்சார திருத்த விதிகள் 2026 மத்திய அரசு மின்சார திருத்த விதிகள் 2026- ஐ (Electricity (Amendment) Rules, 2026) அறிவித்துள்ளது. இது நிறுவனங்களின் சொந்த மின் உற்பத்தி தொடர்பான மின்சார விதிகள், 2005-ன் விதி 3-ஐ திருத்துகிறது. இந்த திருத்தங்கள் வணிகம் செய்வதை எளிதாக்குதல், தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. தேசிய மின்சாரக் கொள்கை - 2005, தொழில்துறைக்கு நம்பகமான, செலவு குறைந்த மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான வழிமுறையாக சொந்த மின் உற்பத்தியை அங்கீகரித்தது. இந்த மின் உற்பத்தி, தொழில்துறைகளுக்கு விநியோகக் கட்டுப்பாடுகளைக் குறைத்து, மின்சாரச் செலவுகளையும் குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கிறது. இந்தியத் தொழில் நிறுவனங்கள் நிலைத்தன்மையைப் பூர்த்தி செய்வதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தியை அதிக அளவில் ஏற்றுக்கொள்கின்றன. இந்தச் சூழலில், தொழில்துறை போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், தெளிவான, கணிக்கக்கூடிய, செயல்படுத்தக்கூடிய கட்டமைப்பை செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது. மின்சார (திருத்தம்) விதிகள் 2026, சொந்த மின் உற்பத்தி நிலையங்களை நிர்வகிக்கும் கட்டமைப்பில் அதிக தெளிவையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும். இதனால் தொழிற்சாலைகள் தங்கள் சொந்த நுகர்வுக்காக மின்சாரத்தை எளிதாக உற்பத்தி செய்ய முடியும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240205®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்