நோக்கம்

மின்சாரக் கட்டணம் மற்றும் பராமரிப்புச் செலவினைக் குறைப்பதற்கும், ஊரகப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியினை ஊக்குவிப்பதை குறிக்கோளாகக் கொண்டும், இத்திட்டம் 2011-12ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலக்கு

இத்திட்டத்தின் கீழ், ஐந்தாண்டுகளில் ஒரு லட்சம் தெருவிளக்குகளை சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகளாக மாற்றவும், ஒரு ஆண்டிற்கு 20,000 தெருவிளக்குகளை சூரிய சக்தி தெருவிளக்குகளாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமங்கள் தேர்வு

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான கிராம ஊராட்சிகளை தேர்வு செய்வார்கள். மேலும் ஒரு கிராம ஊராட்சியில் சூரிய சக்தி தெருவிளக்குகளாக அமைத்திட வேண்டிய எண்ணிக்கையையும் முடிவு செய்வார்கள்.

•மாவட்டத்தில், தொலை துhரத்தில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

•மயானங்கள், மயான சாலைகள், புதிதாக குடியிருப்பு உருவான பகுதிகள், தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

•தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாய் திட்டம் (தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம்) செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தெரு விளக்குகளை சூரிய சக்தி தெரு விளக்குகளாக மாற்றம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இனங்கள்

i) சூரிய சக்தியைப் பயன்படுத்தி 1000 தெருவிளக்குகள் தனித்தியங்கும் விளக்குகளாக நிறுவப்படும்.

ii) ஓவ்வொரு 10 தெருவிளக்கிற்கும் பொதுவான 500 வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி நிலையம் அமைத்து, ஏற்கனவே உள்ள தெருவிளக்குகள் சூரிய சக்தி தெருவிளக்குகளாக மாற்றப்படும். இவ்வாறு 19,000 தெருவிளக்குகள் சூரிய சக்தி தெருவிளக்குகளாக மாற்றப்படும்.

iii) இதன் அடிப்படையில், தகுதியுடைய கிராம ஊராட்சிகளையும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தேவைப்படும் இடங்களையும் கீழே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை கருத்திற் கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.

i) சூரிய சக்தியைப் பயன்படுத்தி எத்தனை தெருவிளக்குகள் எந்தெந்த இடங்களில் / ஊராட்சிகளில் அமைக்கப்பட வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

ii) 2013-14 ஆம் ஆண்டிற்கான சூரிய சக்தியைப் பயன்படுத்தி அமைக்கப்பட வேண்டிய தெருவிளக்குகள், நடப்பு ஆண்டில் தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் (தாய்) செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் / குக்கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

iii) சூரிய சக்தியைப் பயன்படுத்தி தனித்தனியாக நிறுவப்படும் தெருவிளக்குகள், மயானம் மற்றும் அதற்குச் செல்லும் பாதை, மின்வசதியே இல்லாத ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதியதாக நிறுவப்படவேண்டும்.

iv) மாவட்டத்தின் தொலை தூரப்பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் புதிய சூரிய சக்தி தெருவிளக்குகள் தற்போது இயங்கி வரும் தெருவிளக்குகளுக்கு இடையே நிறுவப்பட வேண்டும்.

எ) மின்சார வசதியே இல்லாத கிராமங்களில் சூரிய சக்தி மூலம் இயங்கும் தெருவிளக்குகள் ஒரு வரிசையில் 10 விளக்குகள் அமைந்திடும் வகையில் நிறுவப்படவேண்டும்.

vi) தொடர்ந்து மின் அழுத்தக் குறைபாடு ஏற்படும் குக்கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

vii) தொலைதூரத்தில் உள்ள குடியிருப்புகளுக்கும், வனப் பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

viii) குமிழ் விளக்குகளுக்கு பதிலாக சூரிய சக்தி தெரு விளக்குகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

ix) குடியிருப்புகளில் ஒதுக்குப்புறமாக / தனித்த பகுதிகளில் ஒற்றை தெருவிளக்குகளை அமைத்திட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

x) ஏற்கனவே உள்ள குமிழ் விளக்குகள் / குழல் விளக்குகளை மாற்றும் போது ஒரே வரிசையில் தொடர்ச்சியாக உள்ள 10 தெருவிளக்குகளை தேர்வு செய்து ஊரின் மையப் பகுதிகளில் அமையவுள்ள சூரிய சக்தி நிலையத்தின் மூலம் தெருவிளக்குகள் அமைத்திட வேண்டும்.

xi) சூரிய சக்தி தெருவிளக்குகள் அமைத்திடுவதற்கான இடம் தேர்வு செய்யும் போது தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தை மின்சார வாரியத்தினையும் கலந்தாலோசித்திட வேண்டும்.

xii) கிராம ஊராட்சிகளில், சூரிய சக்தி நிலையம் அமைக்கத் தேவைப்படும் இடத்தினை வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திட்ட செயலாக்கம்

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாகும்.

•சூரிய சக்தி தெருவிளக்குகள் அமைக்கப்பட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து பராமரித்திடுவதை உறுதி செய்யும் வகையில் கிராம ஊராட்சிப் பகுதியிலுள்ள கிராம ஊராட்சி செயலர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு இது குறித்த பயிற்சி அளிக்கப்படும்.

•ஒவ்வொரு மாவட்டத்திலும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையில் நியமிக்கப்படும் தொழில்நுட்ப பொறியாளர்கள் பராமரிப்புப் பணியினை ஒருங்கிணைந்து கண்காணிப்பார்கள்.

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை

மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில்: வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)ஒன்றியப் பொறியாளர்

கிராம ஊராட்சி அளவில்: கிராம ஊராட்சித் தலைவர்

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்