காலத்திற்கு ஒவ்வாத எரிபொருள் பயன்பாட்டினால் மக்களால் வெளியேற்றப்படுகிற பசுமை வீடு வாயுக்கள் என்றழைக்கப்படுகிற புகைகள், சில வேளாண்மை மற்றும் தொழிலக நடவடிக்கைகள், காடுகள் அழிக்கப்படுதல் போன்றவற்றால் பருவநிலையில் மாற்றம் ஏற்படுகிறது என்றும், அது, வளிமண்டலத்தின் அடர்த்தியை அதிகரிக்கச்செய்து, அடுத்த சில தலைமுறைகளுக்குள் உலகின் தட்பவெப்பத்தை, குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றிவிடும் என்றும் 2006 ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் கொள்கை குறிப்பிடுகிறது. பருவநிலை மாற்றம், உயிரின வாழ்க்கைச் சூழலில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, வாழ்வாதாரங்கள், பொருளாதார நடவடிக்கை, வாழும் நிலைமைகள், உடல் நலன் ஆகியவற்றுக்கு பெருங்கேட்டினை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பசுமை வீடு வாயுக்களைப் புறக்கணிப்பதால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஏனெனில், பசுமை வீடு வாயுக்களைப் பயன்படுத்துவது, குறிப்பிடத்தக்க அளவுக்கு செலவுச்சிக்கணம் கொண்டவை.

மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலைமாற்ற அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டமானது, "உள்ளர்ந்த மற்றும் நீடித்த மேம்பாட்டு உத்தி மூலம் பருவநிலை மாற்றத்தால் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் ஏழை மக்கள் மற்றும் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரை பாதுகாப்பதே அதனுடைய முதல் கொள்கை" என்று தெளிவுபடத் தெரிவிக்கிறது. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பல பாதகமான விளைவுகளைக் கணிசமாகக் குறைக்க இயலும் என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்துள்ளது. இதன் மூலமாக குறிப்பாக எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிற மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கு பங்களிக்க இயலும்.

உத்திகள் மற்றும் நடவடிக்கைகள்

CCARAI

இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் தட்பவெப்ப மாற்றத்திற்கேற்ப தகவமைதலுக்கான இந்திய-ஜெர்மானிய மேம்பாட்டு நிறுவனத் திட்டத்தின் நான்கு கூட்டாளி மாநிலங்களுள், தமிழ்நாடும் ஒரு மாநிலமாக விளங்குகிறது. இது, இந்தியாவிலுள்ள, எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிற ஊரகச் சமுதாயத்தினரின் வாழ்வாதாரங்கள் மற்றும் தகவமைவுத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை, இந்த முயற்சியை ஒருங்கிணைக்கிற ஒருங்கிணைப்பு முகவராக உள்ளது. இத்திட்டம், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிற பிரிவினர் மற்றும் குழுவினரின் இடரைக் குறைக்கிற மற்றும் அவர்களுடைய தகவமைவுத்திறனை அதிகரிக்கிற பல்வேறு துறைகளின் கொள்கை முடிவுகளில், பருவநிலை மாற்றத்திற்கேற்ப தகவமைதல் குறித்த அம்சத்தை ஒருங்கிணைப்பது குறித்து கவனம் செலுத்துகிறது. இது, இந்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுடன் இணைந்து, உறுதியான தகவமைவு நடவடிக்கைகளை உருவாக்குவதுடன், வெற்றிகரமான தொழில்நுட்பம் மற்றும் நிதி சார்ந்த தகவமைவு அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இதனை அடைவதற்கு, இத்திட்டம், கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல்திட்டம்

பாதிப்புதன்மை மற்றும் இடர் மதிப்பீடு

தொழில்நுட்பத் தகவமைவு விருப்புரிமைகளை உருவாக்குதல்

ஊரக வளர்ச்சித் திட்டங்களை, பருவநிலை மாற்றத்திலிருந்து பாதுகாத்தல்

தகவமைதலை நோக்கமாகக் கொண்ட நிதிசார்ந்த ஆவணங்களை உருவாக்குதல்

தட்பவெப்ப மாற்ற தகவமைவு குறித்த தேசிய விவாதங்களுக்கு ஆதரவளிப்பதற்கான தகவல் மற்றும் அறிவு மேலாண்மை

திறன் உருவாக்கம்

பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல்திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்

தமிழ்நாட்டிற்கான பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல்திட்டத்திற்கு, (பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்ட வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில்) 31.3.2015 அன்று, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஒப்புகையளிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல்திட்டம், கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்கால தட்பவெப்ப முன் கணிப்புகள் மற்றும் மாநில அரசால் நியமிக்கப்பட்ட வழிகாட்டுக் குழுக்கள் அடையாளம் காண்பிக்கும் (1) நீர் ஆதாரங்கள், (2) நீடித்த வகையிலான மேலாண்மை, (3) நீடித்த வகையிலான இயற்கை வசிப்பிடம், (4) வனம் மற்றும் பல்வகை உயிரினத் தொகுதி, (5) எரிபொருள் சிக்கனம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, (6) கடலோரப்பகுதி மேலாண்மை மற்றும் (7) அறிவு மேலாண்மை ஆகிய துறைகளில் தணித்தல் மற்றும் பாதிப்பு தணிப்பு செயல்திட்டங்களை உருவாக்கும். இந்த வழிகாட்டு குழு ஒவ்வொன்றிலும் அந்தந்த துறைகளின் தலைவர் / செயலாளர், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். அரசுத்துறைகள், அரசு சாரா அமைப்புகள், கல்வி சார்ந்த வல்லுநர்கள் மற்றும் அறிவியல் வல்லுநர்கள் ஆகியோர் இந்த உறுப்பினர்களில் அடங்குவர்.

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, அனைத்து மாநில வேளாண் தட்பவெப்ப மண்டலங்களிலுள்ள பரந்த அளவிலான பொறுப்பாளர்களிடமிருந்து கலந்தாலோசனை மூலம் தகவல்கள் கோரப்பட்டன. பரந்த அளவிலான பொறுப்பாளர்களில், அடங்கும் உழவர்கள், மீனவர்கள், பழங்குடி தொகுதியினர், (குழுவினர்) ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் வல்லுநர்களும் பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டத்தைத் திருத்தியமைத்து, நவீனப்படுத்துகின்றனர். தற்போது, பருவநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு மாநில செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உத்திகளை, அடையாளம் காணப்பட்ட துறைகளில் செயல்படுத்துவதற்காக, தகவமைவு நிதி வாரியம், பசுமை தட்பவெப்ப நிதியம், பருவநிலை மாற்றத்திற்கான தேசிய தகவமைவு நிதியம் மற்றும் பல்வேறு பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டம் தொடர்பான அனைத்து தேசிய திட்டங்கள் ஆகியவற்றிடமிருந்து நிதியைக் கோர உள்ளன. பருவநிலை மாற்றத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்வதற்காக வாழ்வாதார மேம்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் நீடித்த தன்மையை ஏக காலத்தில் எதிர் கொள்ளும் ஒருங்கிணைந்த தீர்வை உருவாக்குவது அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது.

பசுமை வீடு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான பொறுப்பேற்புகள்

2009-10 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் கரியமிலவாயு வெளியேற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 111.86 மில்லியன் டன் அடிப்படை வாயு வெளியேற்றப்படுவதாக மதிப்பீடு செய்துள்ளது. அவற்றுள் மின் உற்பத்தி மூலம் வெளியேற்றப்படுகிற வாயு 84.7 மில்லியன் டன் என்றும், இதில் தொழில் மற்றும் வேளாண்மை துறைகள் முறையே 18.12 மில்லியன் டன் மற்றும் 16.42 மில்லியன் டன் வாயுவை வெளியேற்றுகின்றன என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை வீடு வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, தமிழ்நாடு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும். பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிர்ணயித்த இலக்குகளையும் குறிக்கோள்களையும் விஞ்சுவதற்கு, தமிழ்நாடு பாடுபடும்.

ஆதாரம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை