சூரிய ஒளி லாந்தர் எனப்படுவது சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எளிய சாதனமாகும். மின்சார விநியோகம் சீராக இல்லாமல் பற்றாக்குறையாகவுள்ள கிராமப்புற பகுதிகளில் இது நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில், இதன் எளிய தொழில்நுட்பம் காரணமாக, மின்சாரம் கிடைக்காத போது மக்களால் ஒரு சிறந்த மாற்றாக, பெருமளவில் விரும்பப்படுகிறது.

சூரிய ஒளி லாந்தர் எவ்வாறு வேலை செய்கிறது?

சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் ஒளித் தகடு (பேனல்), மின்சாரத்தை சேமிக்கும் மின்கலன் (பேட்டரி), விளக்கு ஆகியவை சூரிய ஒளி லாந்தரிலுள்ள மூன்று முக்கியமான பாகங்களாகும். இது செயல்படும் விதம் மிகவும் எளிதானது. சூரிய ஒளி ஆற்றலை மின்சார ஆற்றலாக ஒளித் தகடு மாற்றி, அதனை பராமரிப்பு தேவையில்லாத மின்கலத்தில் சேமித்து, இரவு நேரங்களில் உபயோகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மின்சாரம் சேமிக்கப்பட்டால், அதன் மூலம் விளக்கை 4 - 5 மணி நேரம் பயன்படுத்தலாம்.
Source: www.geda.org.in