செய்யக்கூடியவை

ஐ.எஸ்.ஐ (ISI) முத்திரை பொறிக்கப்பட்ட மின்பொருட்களை, சான்றளிக்கப்பட்ட எலக்டீரிஷியன் மூலம் மட்டுமே பொருத்தவும்.

வீட்டில் உள்ள ஒயரிங்கை, அவ்வப்பொழுது சரி பார்த்து, பழுது இருந்தால் உடனுக்குடன் சரி செய்யவும்.

வெளியே செல்லும் பொழுது, அறுந்து கிடக்கும் மின்கம்பியினைக் கண்டால், அதனருகில் செல்லாமல், உடனே அருகிலிருக்கும் மின் அலுவலகத்திற்கு தெரிவிக்கவும்.

குழந்தைகள் காற்றாடி கொண்டு விளையாடும் பொழுது, மேல் நிலை மின்கம்பிகள் செல்லும் இடத்திற்கருகில் செல்லாமல் கண்காணிக்கவும்.

கோவில் தேர் திருவிழா சமயத்தில், தேரானது மின்சார கம்பிகளில் பட்டு விபத்து ஏற்படாமல் தடுக்க, பொது மக்கள் மற்றும் விழா நடத்தும் கோவில் நிர்வாகிகள் தமிழ்நாடு மின் உற்பத்தி (ம) பகிர்மான கழகத்திற்குட்பட்ட பிரிவு/உபகோட்டம்/ கோட்டம்/வட்டம் மின் அலுவலகத்தில் முன்னமே தெரிவித்தால், தேர் செல்லும் பாதையில் மின்சாரத்தை துண்டித்து விபத்து நடப்பதை தடுக்கலாம்.

வேறு வேலைகளுக்காக பூமிக்கடியில் தோண்டும்போது மின் புதைவடங்கள் செல்வதை கவனித்து வேலை செய்யவும்.

5 கி.வாட் மற்றும் அதற்கு மேல் மின்பளு உபயோகிப்பவர்கள் எர்த் லீகேஜ் ப்ரோடெக்‌ஷன் (Earth leakage protection device) கருவியை ஒவ்வொரு மின்சாதனத்திலும் பொருத்தவும்.

செய்யக்கூடாதன

மின்கம்பிகளில் ஈர துணிகளை உலர்த்தக்கூடாது, உலர்த்தினால் உயிரிழக்க நேரிடும்.

மழைக்காலங்களில் மின்கம்பம், மின்கம்பங்களை நிலை நிறுத்தும் கம்பி, வேலி ஆகியவற்றின் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்கவும்.

மின்கம்பங்களை, பந்தல் போடும் மற்றும் விளம்பரம் செய்யும் துாணாக பயன்படுத்த வேண்டாம்.

மின்கம்பங்கள் அல்லது மின்கம்பங்களை நிலை நிறுத்தும் கம்பிகளில் பண்ணை/வீட்டு விலங்கினங்களை கட்டக்கூடாது.

மேல் நிலை மின்கம்பிகள் அருகில் வீடு கட்டக்கூடாது. வீடு கட்டுவதற்கு முன்பு அருகில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தின் ஆலோசனையை பெற்று தீர்மானிக்கவும்.

மின்மாற்றி மற்றும் துணை மின் நிலையங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளை அசுத்தம் செய்ய வேண்டாம்.

லாரி போன்ற வாகனங்களை மேல் நிலை மின்கம்பிகள் செல்லும் இடங்களில் நிறுத்தவோ (ம) பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ செய்யக்கூடாது.

மேல் நிலை மின்கம்பியின் மின் வில் (Arcing Distance) துாரத்தின் அருகில் ஏணி போன்ற உயரமான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தவிர்க்கவும்.

மின்வேலி அமைத்தல் உயிர் பலிக்கு வித்திடும். மின்வேலி அமைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது.

தகாத மின் வேலைகளை தரமற்ற மின்பொருட்களை கொண்டு செய்யக்கூடாது மற்றும் உரிய அனுமதியில்லாமல் வேறு கட்டிடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லக்கூடாது.

உங்களுடைய வசதிக்காக, மின் நிலை நிறுத்திகளை வெட்டவோ, நாசப்படுத்தவோ கூடாது.

ஆதாரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்