நுகர்வோர் சேவை 1. நுகர்வோர், தங்கள் குறைகளை தொலைபேசியின் மூலமாகவோ, நேராகவோ அல்லது கடிதம் மூலமாகவோ அந்தப் பகுதிக்குரிய உதவிப் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கொடுக்கலாம். 2. மேலும் நுகர்வோர், அவர்கள் குறைகளை செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் அல்லது மண்டல தலைமைப் பொறியாளருக்கு கடிதம் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அல்லது தினமும் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரையில் நேரில் சந்திக்கலாம். 3. மேற்பார்வை பொறியாளர்கள் மாதம் ஒரு முறை அந்தந்த பகுதிக்குரிய செயற் பொறியாளர் அலுவலகங்களில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துகின்றனர். இந்த குறைதீர்ப்பு நாளின் தேதி முன் கூட்டியே பிரிவு/கோட்ட அலுவலக விளம்பர பலகையிலும் மற்றும் செய்தித் தாளிலும் அறிவிக்கப்படும். இவ்வசதியை நுகர்வோர் பயன்படுத்தி அவர்கள் குறைகளை நேரில் தீர்த்துக் கொள்ளலாம். மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் - முறையீடு படிவம் 4. மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர், இந்த அமைப்பினை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ளலாம். நுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள் 5. நுகர்வோர் தொண்டு நிறுவனங்களுக்குன்டான கூட்டம், அந்த பகுதிக்குரிய மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம்பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும். கேள்வி பதில் 1. நான் ஒரு புதிய இணைப்பு பெறுவது எப்படி? தங்களின் வயரிங்குகளை ஒரு அரசு மின் உரிமம் பெற்ற உரிமையாளர் மூலம் செய்து முடிக்கவும்.பின்னர் தங்கள் பகுதியுள்ள உதவி பொறியாளர்/இயக்குதல் & பராமரிப்பு, தமிழ்நாடு மின்வாரியம் அலுவலரை மற்ற விவரங்களுக்காக அணுகவும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு மின்வாரிய இணைய தளத்தில் உள்ளது.மற்றும் உதவி பொறியாளர் அலுவலகத்திலும் இலவசமாகக் கிடைக்கும். 2. என் மின் இணைப்பின் மின் கட்டணத்தை (White Meter Card) வெள்ளை அட்டையை தவிர்த்து) எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்? தங்கள் பிரிவு அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளர்/வருவாய் ஆய்வாளர்/கணக்கீட்டாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளத்தில் (web) www.tneb.in Consumer servicesல் உள்ள மெனுவில் (Bill Status) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.முன்னதாக தாங்கள் எந்த மண்டலத்தில் (Region)எந்த வட்டத்தில் வருகிறீர்கள் என்று தெரிந்திருக்க வேண்டும். 3. நான் மின் கட்டணத்தை முன் பணமாக செலுத்தலாமா? கட்டலாமா? கட்டிய பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஆம்,நீங்கள் முன் பணமாக மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் கணக்கிட்டு ஆய்வாளர் வருவாய் மேற்பார்வையாளரிடம் கட்டலாம். கட்டிய முன் பணம், அடுத்தடுத்து வரும் கணக்கீட்டு மாதங்களில், சரி செய்யப்படும். 4. தற்காலிக மின் இணைப்பு பெற என்ன விதிமுறைகள்? தங்கள் பிரிவின் அலுவலரை சந்தித்து தற்காலிக மின் இணைப்பு பெறலாம். முன்னதாக மின் இணைப்பிற்கான ஒயரிங் செய்திருக்க வேண்டும், 5. மின் கட்டணத்தை ECS மூலம் பணம் செலுத்த நான் என்ன செய்யவேண்டும்? முதலில் பிரிவு அலுவலரை சந்தித்து ECS விண்ணப்பம் பெற்று அந்தந்த வட்டத்திற்கு உட்பட்ட துணை நிதி கட்டுபாட்டு அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இது இன்னமும் முழுமையாக அனைத்து அலுவலகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆதாரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்