போட்டோவோல்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சூரிய ஒளியை டி.சி (DC) மின்சாரமாக மாற்றுவதன் மூலம், சூரிய தெரு விளக்குகள் செயல்படுகின்றன. இப்படி உற்பத்தியாகும் மின்சாரத்தை, பகலில் நேரடியாக விளக்கை எரிய வைப்பதற்கோ அல்லது பேட்டரிகளில் சேமித்து, இரவில் விளக்கை எரிய வைப்பதற்கோ பயன்படுத்தலாம்.

சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்கின் பாகங்கள்

இந்த விளக்கானது கீழ்கண்ட பகுதிகளைக் கொண்டது

சூரிய போட்டோவோல்டிக் அமைப்பு

பேட்டரி பெட்டி

சார்ஜ் கட்டுப்படுத்தும் கருவியுடன் கூடிய விளக்கு

விளக்கு கம்பம்

இப்பாகங்களின் பொதுவான சிறப்பியல்புகள் ஆவது,

74 வாட் சோலார் போட்டோவோல்டிக் அமைப்பு

12 V, 75 Ah குழாய் வடிவிலான பேட்டரி பெட்டியுடன் கூடிய சார்ஜ் கன்ட்ரோலர் மற்றம் இன்வெர்ட்டார் (20-35 kHz)

11 வாட் சி.பஃ.எல். (CFL) விளக்கு

வானிலை தாக்கா வர்ணம் பூசப்பட்ட, 4 மீட்டர் உயரமான (தரையின் மேலிருந்து) ஸ்டீல் கம்பம்

இந்த விளக்கானது, குட்கிராமங்களில் தெறுக்களை ஓளிர்விக்க பொருத்தமானதாகும. ஒரு நாளைக்கு, 10-11 மணி நேரம் வரை விளக்கு எரியக்கூடிய வகையில் பேட்டரியில், மின்சாரத்தை சேமிக்கலாம். இந்த விளக்கில், தானாக இயங்கக் கூடிய வகையில் ஆன்/ஆப் (ON/OFF ) ஸ்விட்ச் அமைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சார்ஜினால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் மற்றும் வெளிபடுத்தும் இன்டிகேட்டர் விளக்குகளும் உண்டு.

சூரிய போட்டோவோல்டிக் அமைப்பு ஆனது, 15-20 வருடங்கள் உழைக்கக் கூடியது. இந்த விளக்குடன் அமைக்கப்பட்டிருக்கும், குழாய் வடிவிலான பேட்டரியானது, மிக குறைந்த பராமரிப்பு செலவு, பல வருடங்கள் உழைக்கக் கூடிய மற்றும் மேன்மையான திறன் அளிக்கக்கூடியது ஆகும்.

விலை

சாதாரணமாக பயன்படுத்தும் மாதிரியின் விலை சுமாராக ரூ.24,000/- ஆகும். மாதிரியைப் பொறுத்து விலை வேறுபடும்.

நன்மைகள்

மின்சாரம் தேவையில்லை

எளிதாக நிறுவலாம்

எளிதாக இயக்கவல்லது மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது

மூலம்: www.geda.org.in