எரிசக்தியைச் சேமிக்கும் முறைகள்

ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள பம்புகள் பயன் படுத்துவதன் மூலம் சிறியதும் பெரியதுமான பழுதுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பம்பின் திறனை 25% லிருந்து 35% வரை மேம் படுத்தலாம்

பெரிய வால்வு போடுவதால் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கக் குறைவான எரிபொருளும், மின்சக்தியுமே தேவைப்படும் என்பதால் மின்சார, டீசல் உபயோகம் குறையும்.

குழாய்களில் வளைவுகளும் இணைப்பான்களும் எந்த அளவிற்குக் குறைவாக உள்ளனவோ அந்த அளவுக்கு மின்சக்தியை அதிகமாகச் சேமிக்க முடியும்.

குழாய்களில் சாதாரணமான வளைவுகளைக் காட்டிலும் கூர்மையான வளைவுகளால் தேய்மானம் 70% அதிகமாகும்.

குழாயின் நீளத்தை 2 மீட்டர் குறைத்தால் ஒரு விவசாயி ஒவ்வொரு மாதமும் 15 லிட்டர் டீசலைச் சேமிக்க முடியும்.

கிணற்றின் நீர்மட்டத்திற்கு மேல் 10 அடியைத் தாண்டாதவாறு பம்ப் பொருத்தப்பட்டால் அதன் திறன் அதிகரிக்கும்.

தரமான பிவிசி உறிஞ்சு குழாயைப் பயன்படுத்துவதன் மூலம் 20% எரிபொருளையும், மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.

உற்பத்தி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி பம்ப்செட்டில் எண்ணெய் அல்லது கிரீஸைத் தொடர்ந்து உபயோகித்துவர வேண்டும்.

மின்சக்தி உபயோகம், மற்றும் வோல்டேஜின் சரியான பயன்பாடு ஆகியவற்றிற்காக, ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட சரியான அளவிலான ஷண்ட் கெபாசிடர் மற்றும் மோட்டரைப் பயன்படுத்த வேண்டும். இதனால் மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.

பம்ப்செட் அருகில் இருக்கும் விளக்கைப் பகல் நேரங்களில் அணைத்து வையுங்கள்

மூலம் : எரிசக்தி சேமிப்பு பணி

தொடர்புடைய வளங்கள்

NREDCAP