மறுசுழற்சி மூலம் உருவாகும் தாள்களை பயன்படுத்துங்கள்

மறுசுழற்சித் தாள்களை, குறைவான இயற்கை வள ஆதாரங்களையும் குறைவான விஷத்தன்மையுள்ள வேதிப் பொருட்களையும் பயன்படுத்தித் தயாரிக்க முடிகிறது. வீனான தாள்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு டன் பேப்பர்

பதினைந்து மரங்களைக் காப்பாற்றுகிறது

2500 கிலோ வாட் மணிகள் அளவுள்ள எரிசகக்தியை சேமிக்கிறது

20000 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது

25 கிலோ கிராம் அளவு மாசுகள் காற்றில் கலப்பது குறைகிறது

குழந்தைகளுக்கு - பசுமைக்கான குறிப்புகள்

1. காகிதங்களை வீணடிக்காதீர் - நாம் காகிதங்கள் தயாரிப்பதற்கு மரங்களை வெட்டுகிறோம். இதனால், காகிதங்களை குறைத்து பயன்படுத்தினால், மரங்களை பாதுகாக்கலாம்.

2. பள்ளிகளுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ அல்லது பேருந்திலோ செல்லவும். இதனால் எரிசக்தியை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுப்புறம் மாசுபடுவதையும் தவிர்க்கலாம்.

3. பல் விலக்கும் பொழுதும், குளிக்கும் பொழுதும், தேவை இல்லாத நேரங்களில் குழாயை மூடவும். இதனால் நீர் சேமிக்கப்படும்.

4. பள்ளிகளில் இயற்கை எரு தோட்டங்களை தொடங்கி அதற்கு தேவையான எரு குழிகளை உருவாக்குங்கள் - இதன் மூலம் இயற்கை வளங்களை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை அறிவீர்கள்.

5. உபயோகிக்காத போது விளக்குகள் மற்றும் மின்சார பயன்பாட்டு சாதனங்களை நிறுத்தவும். இதனால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

6. பருவகால பழங்களை உண்ணுங்கள் - இதனால் இயற்கையை மற்றும் பணத்தை சேமிக்கலாம்.

7. மரங்களை நடுங்கள். இவை உங்கள் சுற்றுப்புறத்தை பசுமையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும்.

8. பாக்கெட் பொருள்களை குறைவாக பயன்படுத்தி கழிவுகளை குறைத்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்.

9. உங்கள் நேரத்தை வீடியோ கேம் மற்றும் தொலைக்காட்சியில் செலவிடாமல் இயற்கையுடன் கழியுங்கள் - இதனால் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன், நீங்களும் உடல் நலமாக இருக்கலாம்.

10. இயற்கையை பாதுகாப்பதற்கு துாதுவராக இருங்கள் - அப்படி இருக்க, இந்த குறிப்புகளை உங்கள் நண்பரிடம் பரப்புங்கள்.