ஸ்பைருலினா எனப்படுவது ஒரு உண்ணக்கூடிய பசும் பாசியாகும். இதில் நச்சுப்பொருட்கள் ஏதும் இல்லை, ஆனால் அதிக புரதச்சத்தும், வைட்டமின்களும், அதிக மருத்துவ குணங்களும் உள்ளன. எளிய, குறைந்த செலவுடைய ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் ஊரக மகளிர் வீட்டிலேயே ஸ்பைருலினா பாசியினை வளர்க்கலாம். இதற்கு தேவைப்படும் இடம் மற்றும் செலவும் குறைவு. உலர்ந்த ஸ்பைருலினா பாசியினை விற்கும் போது வருமானம் கிடைக்கும் தொழிலாக ஸ்பைருலினா வளர்ப்பு இருக்கிறது.

தேவையான பொருட்கள்
35-40 லிட்டர் கொள்ளளவும், 25 சதுர சென்டிமீட்டர் வெளிப் பரப்பளவும் உடைய மூன்று மண் பானைகள், பாதுகாப்பான இடம் ஸ்பைருலினா வளர்ப்பதற்கான ஊடகம்

செய்முறை

சாண எரிவாயு கழிவு, 2-3 கிராம் கடல் உப்பு அல்லது ரசாயன உப்புகள் (பொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட், சமையல் சோடா, சோடியம் குளோரைடு), சுத்தமான ஸ்பைருலினா.

மூன்று மண் பானைகளையும் அவற்றின் கழுத்தளவு மண்ணில் புதைத்துவிட வேண்டும். பிறகு ஊடகப் பொருட்களுடன் தண்ணீர் கலந்து மண் பானையில் ஊற்றவேண்டும். சாண எரிவாயு கழிவு ஸ்பைருலினா பாசி வளர்வதற்கு ஏற்ற செலவற்ற ஊடகமாகும்.

சிறிய அளவிலான ஸ்பைருலினா பசும் பாசியினை எடுத்து அதனை ஊடகம் நிரப்பி வைத்திருக்கும் பானைக்குள் போடவேண்டும். (முதன் முதலில் ஸ்பைருலினா வளர்க்கும்போது அதற்கு தேவையான ஊடகத்தினை தயாரிப்பாளரிடமிருந்து கேட்டு வாங்கிக் கொள்ளலாம்).

பானையிலுள்ள ஊடகத்தினை ஒரு நாளைக்கு 3-4 முறை கலக்கி விடவேண்டும், ஏனெனில் ஸ்பைருலினா பாசி கலங்காமல் அப்படியே இருக்கும் ஊடகத்தில் வளராது.

ஸ்பைருலினா பாசி முதிர்ச்சி அடைய 3-4 நாட்களாகும் என்பதால் பானைகளை சூரிய ஒளி படுமாறு வைக்கவேண்டும்.

நன்கு முதிர்ந்த ஸ்பைருலினா பாசியினை (வெளிர் நிறத்திலுள்ள ஊடகம் அடர் பச்சை நிறத்திற்கு மாறிய பின்பு) துணியில் வடிகட்டி அறுவடை செய்யலாம்.

தூய தண்ணீரில் ஸ்பைருலினா பாசியினைக் கழுவி (பாசியுடன் ஒட்டியிருக்கும் ரசாயனங்களை நீக்குவதற்கு) பிறகு சப்பாத்தி மாவு, சட்னி, நூடுல்ஸ், காய்கறிகள் (2%) போன்றவற்றுடன் கலந்து உண்ணலாம். ஸ்பைருலினாவினை நிழலில் உலர்த்தி பதப்படுத்தலாம். ஆனால் அறுவடை செய்தவுடனே உலர்த்தி பதப்படுத்தினால் மட்டுமே அதன் தரமும், சத்துகளும் நிலைத்திருக்கும்.

நன்மைகள்

35-40 லிட்டர் கொள்ளளவு உள்ள மூன்று பானைகளிலிருந்து அறுவடை செய்யப்படும் ஸ்பைருலினா பாசி ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 2 கிராம் என்ற அளவில், ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் 100% வைட்டமின் ‘ஏ’, 200% வைட்டமின் பி 12 சத்துகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்ய போதுமானது.

உட்புறம் கான்கிரீட்டினால் செய்யப்பட்ட மண் பானைகள் மற்றும் பாலித்தீன் உறைகள் இட்ட குழிகளை விட மண் பானைகள் கையாளுவதற்கு ஏற்றவை.

மண்பானைகள் சேதமடைந்து விட்டால் அவற்றை எளிதில் மாற்றிவிடலாம். மேலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் தூக்கி வைப்பதும் எளிது.

மண்பானையில் வளர்க்கப்படும் பாசிகள், மாசு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கலாம்.

கிராமப்புற மகளிரின் அதிக முயற்சியினால் அதிக அளவிலான ஸ்பைருலினா பாசியினை மண்பானைகளைக் கொண்டு உற்பத்தி செய்யலாம்.

ஆதாரம்: ஏ.எம்.எம் முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையம், பாசிகள் பிரிவு, சவேரியார்புரம், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு