தமிழகத்தில் உள்ள தேசிய பூங்காக்கள் வ.எண் தேசிய பூங்காக்கள் நிறுவப்பட்ட ஆண்டு பரப்பளவு (ச.கி.மீ ) மாவட்டம் 1 கிண்டி தே. பூ 1976 2.82 சென்னை 2 மன்னர் வளைகுடா தே. பூ 1980 6.23 ராமநாதபுரம், தூத்துக்குடி 3 இந்திரா காந்தி (ஆனைமலை புலிகள் சரணாலயம்) தே. பூ 1989 117.10 கோயம்புத்தூர் 4 முதுமலை தே. பூ 1990 103.23 நீலகிரி 5 முகுர்த்தி தே. பூ 1990 78.46 நீலகிரி ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் தற்பொழுது இந்தியாவில் 118,417 ச கி மீ பரப்பளவில் 513 வனவுயிர் சரணாலயங்கள் உள்ளன. இது இந்தியாவின் புவியியல் பரப்பளவில் 3.60% (தேசிய கானுயிர் தரவு 2009)ஆகும். மேலும் 16,669.44 ச கி மீ பரப்பளவில் 219 வனவுயிர் சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலம் /மத்திய ஆட்சிப் பகுதிகள் மாநிலத்தின் பரப்பளவு(ச கி மீ) வனவிலங்கு சரனாலயங்களின் எண்ணிக்கை பரப்பளவு(ச கி மீ) % மாநிலத்தின் பரப்பளவு ஆந்திரா பிரதேஷ் 275068 22 12599.19 4.58 அருணாச்சல் பிரதேஷ் 83743 11 7606.37 9.08 அசாம் 78438 18 1932 2.46 பீகார் 94163 12 2856.06 3.03 சதீஸ்கர் 135194 11 3583.25 2.65 கோவா 3702 6 647.96 17.50 குஜராத் 196024 23 16619.21 8.48 ஹர்யானா 44212 8 206.95 0.47 ஹிமாச்சல் பிரதேஷ் 55673 33 6171.00 11.08 ஜம்மு & காஷ்மீர் 222235 15 10312.25 4.64 ஜார்கண்ட் 79714 11 1945.58 2.44 கர்நாடகா 191791 21 3888.14 2.03 கேரளா 38863 15 1894.49 4.87 மத்ய பிரதேஷ் 308252 25 7158.40 2.32 மகாராஷ்டிரா 307690 35 14152.69 4.60 மணிப்பூர் 22327 1 184.40 0.83 மேகாலயா 22429 3 34.20 0.15 மிசாரம் 21081 7 680.75 3.23 நாகலாந்து 16579 3 20.34 0.12 ஒரிசா 155707 18 6969.15 4.48 பஞ்சாப் 50362 12 323.80 0.64 ராஜஸ்தான் 342239 23 5447.03 1.59 சிக்கிம் 7096 7 399.10 5.62 தமிழ் நாடு 130058 20 2997.60 2.30 திரிபுரா 10486 3 403.85 3.85 உத்திர பிரதேசம் 240926 23 5222.47 2.17 உத்திரகண்டு 53485 6 2418.65 4.52 மேற்கு வங்கம் 88752 15 1203.28 1.36 மத்திய ஆட்சிப் பகுதிகள் அந்தமான் & நிகோபர் 8249 96 389.39 4.72 சண்டீகர் 114 2 26.13 22.92 தத்ர & நகர் அவேலி 491 1 92.16 18.77 தாமன் & டயு 112 1 2.18 1.95 டெல்லி 1483 1 27.20 1.83 லட்ஷ தீவு 32 1 0.01 0.03 பாண்டிச்சேரி 493 1 3.90 0.79 இந்தியா 3287263 513 118417 3.60 இந்தியாவில் உள்ள பாதுகாப்பு புகலிடங்கள் வ. எண் பெயர் நிறுவப்பட்ட ஆண்டு பரப்பளவு (ச .கி .மீ ) மாவட்டம் /அமைந்துள்ள மாநிலம் 1. ஆசிய வயல் நிலம் 2005 4.44 தேஹ்ரடுன், உட்டரக்ஹாந்து 2. சில்மீல் சில் 2005 37.83 ஹரித்வார், உத்திரகாந்து 3. திருவிடை மருதூர் 2005 0.028 திருநெல்வேலி, தமிழ் நாடு 4. சரஸ்வதி தோட்டம் 2007 44.53 குருக்ஷேற்ற, காய்தல், ஹர்யான 5. பீர் பர பன் 2007 4.19 சிந்த், ஹர்யான 6. போர்கட (போர்கத்) 2008 3.49 நாஷிக், மகாராஷ்டிரா 7. ச்ஹரிதந்த் வீட்லந்து 2008 227.00 அச்ச்ஹ, குஜராத் இந்தியாவில் நடைமுறையில் உள்ள சமுதாயக் காடுகளின் பட்டியல் வ.எண் பெயர் நிறுவப்பட்ட ஆண்டு பரப்பளவு ச.கி.மீ. மாவட்டம் /மாநிலம் அமைவிடம் 1. கோசாஃபூர் 2007 3.44 குர்தாஸ்பூர்,பஞ்சாப் 2. செனாஃ 2007 12.82 ஹோஷியார்பூர்,பஞ்சாப் 3. கடலுண்டி 2007 1.50 மலப்புரம்,கேரளா நடைமுறையில் உள்ள இந்தியாவின் வேங்கை வாழிடங்கள் 1973 ம் ஆண்டு இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள புலியினங்களைக் காப்பாற்ற புலிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1973-74ம் ஆண்டும் ஒன்பது புலிவாழிடங்கள் தற்பொழுது (2006 பரப்பு 38620 கிமீ2 ஆகும். இது இந்தியாவின் மொத்தப் புவிப்பரப்பில் 1.17% ஆகும். மாநிலம் வேங்கை வாழிடங்கள் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு மொத்தப்பரப்பு ச.கி.மீ. அசாம் 1.காசிரங்கா 2006 859 2.மணாஸ் 1973-74 2840 3.நாமேரி 1999-2000 344 அருணாச்சலப் பிரதேசம் 4.நம்தாப்பா 1982-83 1985 5.பாகூய் 1999-2000 862 ஆந்திரா பிரதேசம் 6.நாகார்ச்புன சாகர் சிறீசைலம் 1982-83 3568 பீகார் 7.வால்மீகு 1989-90 840 சட்டீஸ்கர் 8.இந்திராவதி 1982-83 2799 ச்சார்க்கண்ட் 9.பாலாமேள 1973-74 1026 கர்நாடகா 10.பந்திப்பூர் நாகர் கோலே 1973-741999-2000 866643 11.பாத்ரா 1998-99 492 கேரளா 12.பெரியார் 1978-79 777 மத்திய பிரதேசம் 13.பந்தாவ்கள் 1993-94 1162 14.போரி சாத்பூரா 1999-2000 1486 15.கண்கா 1973-74 1945 16.பன்னா 1994-95 542 17.பென்ச் 1992-93 758 மகாராச்சட்ரா 18.மேல்க்காட் 1973-74 1677 19.பென்ச் 1992-93 257 20.தாடோபா அந்தாரி 1993-94 620 மிசோரம் 21.தாம்பா 1994-95 500 ஒரிசா 22.சிம்லிபால் 1973-74 2750 ராசசுதான் 23.ராம்தான்பூர் 1973-74 1334 24.சரீஸ்கா 1978-79 866 தமிழ்நாடு 25.சவுக்காடு - முண்டந்துறை 1988-89 800 உத்திரபிரதேசம் 26.காத்வா - கோட்டநியாநட் 1987-88 1999-2000 811 551 உத்திரகண்ட் 27.கோர்பட் 1973-74 1316 மேற்கு வங்களம் 28.பக்சா 1982-83 759 29.சுந்தரவனம் 1973-74 2585 மொத்தப்பரப்பளவு 38,620 தாவரச் சூழல் இந்தியாவில் 17,672 ஆஞ்சியோஸ்பெர்ம் இனங்கள் காணப்படுகின்றன. இதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதில் 538 வெலச்சூழல் இனங்கள், 230 சிகப்பு வண்ண இனங்கள், 1559 மூலிகைப் பயிரினங்கள் மற்றும் 260 பயிரிடப்படாத தாவரங்கள் போன்றவை அடங்கும். இந்தியாவின் 64 ஜிம்னோஸ்பெர்மி இனங்களில் 4 இனங்கள் தமிழ்நாட்டைச்சார்ந்தவை. மேலும் வெளிநாடுகளில் இருந்து 60 இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் 1022 டெரிடோஃபைட் இனங்களில் தமிழ்நாட்டில் 184 இனங்கள் காணப்படுகின்றன. மேலும் தமிழ்நாட்டில் பிரையோஃபைட்டுகள், லிகின், பூஞ்சான், ஆல்காக்கள் பாக்டீரியாக்கள் போன்ற பல்வேறு இனங்கள் காணப்படுகின்றன. விலங்குச் சூழல் தமிழகத்தில் 165 நன்னீர் இன துடுப்பு மீன்கள், ஆம்பிலியானங்கள், 177 ரெட்டைல்கள் 454 பறவை இனங்கள் மற்றும் 187 பாலூட்டிகள் வாழ்கின்றன. வெப்பமண்டல உயிரிகளாக 36 ஆம்பிபியானங்ஸ், 63 ரெட்டைல்ங்கள், 17 பறவை, 24 பாலூட்டிகளும் காணப்படுகின்றன. பாதுகாப்பு மற்றும் மேலாண்மையின் நோக்கங்கள் கானுயிர்களும் காணுயிர் வாழிடங்களும் பல்லாண்டு கால பரிணாம வளர்ச்சியின் சிறப்புக் கூறுகளாகும். கானுயிர் மற்றும் கானுயிர் வாழிடங்களை பாதுகாப்பது (அ) நிர்வகிப்பது சமூக, பொருளாதார, சூழியில் ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, பொழுதுபோக்கு ரீதியாக ஆண்மிகரீதியாகவும் இன்றைய மாணுட சமுதாயம் மற்றும் இன்னும் பிறக்காத தலைமுறைக்கும் தேவையான அவசியமானதொன்றாகும். கானுயிர்கள் நீர் மற்றும் சூழலியலுடன் நேரடி மற்றும் அநீத நெருக்கம் வாய்ந்தவை. நானுயிர் வாழிடங்கள் மனித செயல்பாடு, இயற்கைச் சீற்றம் மற்றும் வேளாண்மைத் தொழில்களின் அழுத்தங்கள் பாதிய சேதங்களை அடைந்துவருகின்றன. கானுயிர் வாழிடங்களின் பாதுகாப்பு என்பது இயற்கைச் செயல்பாடுகள் (சீற்றங்கள்), வறட்சி, நீர் தட்டுப்பாடு மற்றும் பருவநிலைமாற்றம் போன்றவற்றை தடுக்கும் பெரும் பொறுப்பாகும். வற்றாத நதிகளின் ஊற்றாகவும் இயற்கைச் சமநிலைப்படுத்தியாகவும் செயல்படுகின்ற காணுயிர் வாழிடங்கள் மாணுட சமுதாயத்தின் நீர் மற்றும் உணவுத் தேவைகளை நிறைவு செய்கின்றன. ஒரு தேசத்தின் பொருளாதாரத்தையும் வளர்ச்சியையும் உணவு மற்றும் நீர் தேவைகளையும் நிலையான பாதுகாப்புடன் உறுதி செய்வது என்பது சூழ்நிலையைப் பாதுகாப்பதில் மட்டுமே அடங்கியிருக்கின்றது. சுற்றுச் சூழலியலின் கருவூலமாக தமிழ்நாடு காணுயிர் வளம் நிறைந்ததாக விளங்கி வருகிறது. இவை மருத்துவ தொழில்சாலைகளாக விளங்கும் பல்வேறு மூலிகை வளம் நிறைந்தவையாகவும் விளங்குகின்றன. ஆறுகளின் ஊற்றுக் கண்களாகவும், சிற்றருவிகள் மற்றும் ஓடைகள் மூலமாக வற்றாத நீர் மூலங்களாக (நீராதராங்களாக) தூய நீர் ஆதாரமாகவும் சிறந்து விளங்குகின்றன. இவை கார்பன் சேகரிப்பு மற்றும் கரியமில வாயுவின் அடக்குகளாக அனைத்து உயிரினங்களையும் பயன்பாட்டாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இயற்கையான நுரையீரல்களாக உயிர்வாயுவின் தோற்றுவாயாக அனைத்து உயிர்களின் சுவாசம் மற்றும் வாழ்விற்குப் பயன்படுகின்றன. செய்ய வேண்டியவை வனம் அழிப்பு, பாலைவனமாதல் மற்றும் சேதம் ஆகியவற்றைத் தடுப்பதுடன் முழுமையான பாதுகாப்பளிக்க வேண்டும். காணுயிர் வாழிடங்கள் மற்றும் காணுயிர்களுக்கு விரைவான அதிகபட்ட பாதுகாப்பளிப்பதோடு காணுயிர் (பாதுகாப்பு) சட்டம், 1972 மற்றும் தமிழக வனச்சட்டம் 1882 ஆகியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். காணுயிர் பாதுகாப்பில் வனங்களையொட்டிய கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் சுற்றுச்சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாட்டுக் கோளாறுகளை சரிசெய்யத் தக்க ஆய்வுகளையும் கண்காணிப்பையும் ஊக்கப்படுத்த வேண்டும். கல்வி மற்றும் விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை பெருமடுப்பில் ஊடகங்கள் வாயிலாக ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட திட்டங்களின் வாயிலாக காணுயிர் வாழிடங்கள் மற்றும் காணுயிர் புகலிடங்களில் காட்டுத் தீ ஏற்படுவதை முழுமையாகத் தடுக்க வேண்டும். தேவையான பகுதிகளில் காணுயிர் வாழிடங்களை அதிகப்படுத்தவும் மேம்படுத்தவும் செய்ய வேண்டும். மனித குடியிருப்புகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மாற்றிட வேண்டும். வளர்ப்புக் கால்நடைகளிடமிருந்து காணுயிர்களுக்கு நோய் பரவுவதை தடுக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், காணுயிர் புகலிடங்கள் மற்றும் தேசிய சோலைகளில் நோயுற்ற வளர்ப்புக் கால்நடைகள் நுழைவதைத் தடுக்க வேண்டும். விலங்கியல் பூங்காக்கள் மற்றும் மரபுத் தோட்டங்கள் போன்ற வேற்றிட பாதுகாப்பு மையங்களை நிறுவ வேண்டும். கல்வி மற்றும் தகவல் தொடர்பு மையங்களை நிறுவ வேண்டும். வேலி, வாய்க்கால் மற்றும் சுவர்கள் எழுப்பி பயிர் பாதுகாப்பு அமைப்புகளை எழுப்ப வேண்டும். காணுயிர்களின் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு தக்க நிவாரண உதவிகளை உடனடியாக கொடுத்துவிட வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 25 கி.மீ. விட்ட அளவு வரை தொழிற்சாலை போன்றவற்றின் பாதிப்பு மற்றம் மாசுபடுதலை முற்றிலும் தடுக்க வேண்டும். நில அமைப்பியல் ரீதியாக காணுயிர்கள் பாதுகாப்பிடங்களை ஒருங்கிணைப்பதுடன் கிராம மேம்பாடு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றை நிலையான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாதுகாப்புப் பகுதியிலும் மேற்கொள்ளப்படும் மேலாண்மைத் திட்டங்களை உறுதி செய்ய வேண்டும். மூலிகைத் தாவரங்கள் பாதுகாப்புப் பகுதிகளை ஏற்படுத்தி மூலிகைத் தாவரங்களின் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். சுற்றலாத் திட்டங்களை காணுயிர் வாழிடங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்வது நடைமுறையில் உள்ளது. ஆனால் சுற்றுலாவுக்காக மட்டுமே காணுயிர் வாழிடங்கள் உள்ளன என்ற நிலைக்கு இட்டுச் செல்லல் கூடாது. வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, காணுயிர் பொழுதுபோக்கு, கல்வி, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இது முழுமையான பாதுகாக்கப்பட்ட பகுதியாக இல்லை. முடிவுரை பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உணர்ச்சிகரமானவை. மரபியல் ரீதியாக நாம் இயற்கைச் சூழியல் மண்டலங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்திய பொழுதிலும் மானுட செயல்பாடுகளால் நமது இயற்கை வளம் கடுமையாக பாதிப்படைகிறது. காணுயிர் வளங்களைப் பாதுகாப்பதில் இயற்கை சார்ந்த மரபியல் முக்கியத்துவத்தை அறிந்திருத்தல் மிகவும் அவசியமாகும். விலங்கு சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதுடன் சரியான எண்ணிக்கையிலான பாலூட்டிகள் மற்றும் ஊன் உண்ணிகளின் விகிதத்தை நிர்வகித்தலிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஆதாரம்: வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்