குப்பைகள் முறையாக பயன்படுத்தட வேண்டிய வளம். ஓரு குறிப்பிட்ட நேரத்தில் முறையான பயன்பாட்டில் வைக்கப்படாத பொருளே கழிவு என்று கூறப்படுகின்றன. மக்கள் தொகை பெறுகுவது போல் குப்பைகளின் அளவும் அதிகரிக்கிறது. குவியும் குப்பைகளாலும் அவற்றை அப்புரபடுத்தாதலாலும் சுற்றுச்சூழல் மாசடைகிறது. அது தொற்றி பரவும் நோய்களை தீவரப்படுத்துகிறது. இந்தியாவில் வீடுகளில் கழிவுகள் உருவாகுதல் மிக முக்கிய பிரச்சனையாகும். அனைத்து நகரங்களும் பெருமளவு திடக்கழிவு உருவாக்குகின்றன. அவற்றை அப்புரப்படுத்துவது தான் மிகப் பிரச்சனையாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மக்கள் தொகை 1,21 மில்லியன் ஆகும். இது உலக மக்கள் தொகையில் 17.7% பங்குவகிக்கிறது. நகர்ப்புற இந்தியாவில் உருவாக்கப்படும் நகராட்சி கிடக்கழிவிகள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 68.8 மில்லியன் டன்களாகும். நகரங்கள் குவியும் குப்பைகளின் மையம் நகர்புறத்திற்கு குடியேறும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பது போல, குடிசைப் பகுதிகள் நகரங்களில் காளாண்களைப் போல் அதிகரித்துள்ளது. இது சுகாதாரமற்ற நிலைமையை உருவாக்குகின்றது. நகரங்களில் தினமும் அதிகரிக்கும் குப்பைகள் தரையில், நீர்கழிவுகள் மற்றும் காற்றை மாசுபடுத்துகிறது. போதிய குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றும் வசதியின்றி குப்பைகள் தெருக்களில் குவிக்கப்படுகின்றன. இதனால் தொற்று வியாதிகள் வருகின்றன. திட்டமிடாத குடியேற்றங்கள் மற்றும் வளர்ச்சியால் சாக்கடை அடைப்புகள், குப்பை குவியல்கள் போன்ற பிரச்சனை ஏற்படுகின்றது. அபாயகரமான கழிவுகள் இக்கழிவுகள் மனித நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அபாயகரமானதாகும். திரவங்கள், வாயுக்கள் மற்றும் திடக்கழிவுகள் மற்ற குப்பைகளைப் போல் அகற்ற இயலாது. இதற்கு அறிவியல் பூர்வமான வழிகள் தேவை. மருத்துவமனைக் கழிவுகள் மருத்துவ கழிவுகள் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சையின் போது உருவாக்கப்படுகின்றன. இவை மருத்துவமனை மற்றும் பரிசோதனை நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றது. இதனை சரியான முறையில் அகற்றவில்லை என்றால் தொற்று நோய் மற்றும் சுற்று சூழல் மாசு ஏற்படும். தீர்வுகள் / எளிய வழிகள் கழிவுக் குறைப்பு, மறு உபயோகிப்பு, மறுசுழற்சி போன்ற மூன்று கொள்கைகளை நினைவில் வைத்திருங்கள். கழிவு மேலாண்மை முறையான வழிகளில் கழிவுகளை அப்புரபடுத்த வேண்டும். பொது இடங்களில் குப்பைபோடுதல் மற்றும் குப்பைகளை நீர்நிலைகளில் எரிதல் கூடாது. செல்லப்பிராணிகளின் கழிவுகளை சரியான முறையில் அப்புரப்படுத்த வேண்டும். கழிவு பிரித்தெடுப்பு இயற்கையாக சிதையக் கூடிய கழிவுகள், இயற்கையாக சிதையாதவை (உம். பிளாஸ்டிக்) என கழிவுகளை இரு வகையாக பிரிக்கலாம். இயற்கையாக சிதையக்கூடியது - சமையல் அறை கழிவுகள், காய்கறி, பழங்கள், பூ, காகிதம் போன்றவை. இக்கழிவுகளை மண்புழு வளர்ப்பினால் உரமாக்கலாம். இந்த உரத்தை நம் வீட்டு தோட்ட வளர்ப்புக்கு பயன்படுத்தலாம். இயற்கையாக சிதையாதவையை மறுசுழற்சி செய்தல் பிளாஸ்டிக் காகிதம், கண்ணாடி, உலோகம் போன்றவை. நச்சுத்தன்மை உள்ளவை-பழைய மருந்துகள், வர்ணங்கள், இரசாணயங்கள், பூச்சிக்கொல்லிகள், பேட்டரிகள் முதலியன. மருத்துவமனைக் கழிவுகள் - பஞ்சு, கட்டுத்துணிகள், பிற உடல் திரவங்கள், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகள். விழிப்புணர்வு ஏற்படுத்துதல் விழிப்புணர்வுமுகாம், துப்புரவு இயக்கிகள் போன்றவற்றின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயற்கையாக சிதையக்கூடிய பொருட்களை பயன்படுத்தலாம். ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்