இந்திய தாவரயினங்கள் மனிதனால் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தாவரயினங்களின் எண்ணிக்கை உலகில் - 2,50,000 இந்தியாவில் - 49,219 இவற்றில் 33% தாவரங்கள் இந்தியாவில் பூர்வீகமாக உள்ளவையாகும். இதில் 15,000 பூக்கும் தாவரயினங்களாகும். இது உலகிலுள்ள தாவரயினங்களில் 6 சதவீதமாகும். இந்தியாவின் வடகிழக்கு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வடமேற்கு மற்றும் கிழக்கு இமயமலைப் பகுதிகளில் அரிய பல தாவரயினங்கள் நிறைந்து காணப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுமார் 200 வகையான தீவுகளுக்கே உரித்தான தாவரயினங்கள் காணப்படுகின்றன. பல்லுயிர் பெருக்கச் செறிவு பல்லுயிர் பெருக்கம் உள்ள பகுதிகள் அதாவது உயிரினங்கள் பெருமளவில் ஒரே இடத்தில் அதிகமாக காணப்படும் பகுதிகள் உலகத்தில் மொத்தம் 34 உள்ளன. அவற்றில் இந்தியாவில் பல்லுயிர் பெருக்கச் செறிவு கொண்ட இரண்டு பகுதிகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்கு இமாலய பகுதி ஆகிய இரண்டு பகுதிகளும் இவற்றில் அடங்கும். வடகிழக்கு இமாலய பகுதி இப்பகுதியை சிற்றினங்களின் தொட்டில் என்றழைப்பர். ஏனென்றால் இங்கு அதிகபட்சமான பூக்கும் தாவரங்கள் காணப்படுகின்றன. மேலும் 63% பாலூட்டிகள், 60% இந்திய பறவைகள், இந்தியாவையே பிறப்பிடமாக கொண்ட 2 ஓணான் பேரிணங்கள், 35 ஊர்வனங்கள்(2 ஆமை உள்பட), 68 இருவாழ்விகள், இவற்றில் 28 வடகிழக்கு இமாலயாவை பிறப்பிடமாக கொண்ட இருவாழ்விகள் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகள் இந்தியாவின் மேற்கு கடற்கரையையட்டி அதற்கு இணையாக 1500 கி.மீ. தூரம் வரை மேற்கு தொடர்ச்சி மலைகள் விஸ்தரிகின்றன. இது இந்தியாவின் நிலப்பகுதியில் 5% ஆகும். இமயமலைத்தொடர்ச்சியில் 490 வகையான மரங்கள் காணப்படுகின்றன. அதில் 308 வகையான மரங்கள் மேற்கு தொடர்ச்சி மலையையே பிறப்பிடமாக கொண்டுள்ளன. மேலும் 245 வகையான ஆர்கிட்ஸ் சிற்றினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 112 சிற்றினங்களும் 10 பேரிணங்களும் மற்றும் 1500 இருவித்திலைத் தாவரங்களும் இமயமலைத் தொடரை பிறப்பிடமாகக் கொண்டுள்ளன. இந்தியாவில் மொத்த தாவரங்களின் எண்ணிக்கை பூக்கும் தாவரங்கள் 17,500 வித்துமூடி இலை தாவரம் (ஜிம்னோஸ்பெர்ம்கள்) 64 விதை இல்லா தாவரம் (டெரிடோபைட்ஸ்) 1,022 ப்ரையோபைட்ஸ் 2,584 பாசிகள் 6,500 பூஞ்சைகள் 23,000 பாக்டீரியா 850 லைகன்ஸ் 1,600 இந்திய விவசாயத்தில் பயன்படுத்தப்படும் தாவர சிற்றின எண்ணிக்கையைப் பொருத்தமட்டில் ஏழாவது இடத்தை வகிக்கிறது. நெல், கரும்பு, வாழை, தேயிலை, மா, வெள்ளரி, எலுமிச்சை, சணல், தினை, உளுந்து, கடுகு, பலா, ஏலக்காய், மிளகு, இஞ்சி, மஞ்சள், பூசணி, மூங்கில் போன்ற தாவரயினங்கள் பயன்பாட்டில் இந்தியா முதன்மை இடம் வகிக்கிறது. எள், தக்காளி, உருளைக்கிழங்கு, சோளம், சோயாமொச்சை ஆகியவை பயன்பாட்டில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்திய விலங்கினங்கள் இதுவரை மனிதனால் கண்டறியப்பட்டுள்ள மொத்த விலங்கினங்கள் உலகில் 11,96,903 இந்தியாவில் 86,874 பாலூட்டிகள் 390 பறவைகள் 1,232 ஊர்வனங்கள் 456 இருவாழ்விகள் 209 மீன் இனங்கள் 2,546 உலகிலுள்ள விலங்கினங்களில் 7 விழுக்காட்டிற்கும் சற்று அதிகமான விலங்கினங்கள் இந்தியாவில் காணப்படுகிறது. இங்குள்ள 86,874 விலங்கினங்களில் 68.52% பூச்சியினங்களும் 5.70% முதுகெலும்புடைய விலங்கினங்களும் அடங்கும். பெரிய விலங்கினங்களில் 173 வகையான பாலூட்டிகளும், 101 வகையான பறவையினங்களும் 15 வகையான ஊர்வனங்களும், 3 வகையான இருவாழ்விகளும் 2 வகையான மீன்களும் அழியும் நிலையிலுள்ள சில விலங்கினங்களாகும். அழிவுக்குள்ளாகிவரும் பாலூட்டிகள் நிறைந்த நாடுகளில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்திலும், அழிவுக்குள்ளாகிவரும் பறவைகள் நிறைந்த நாடுகளில் இந்தியா உலகளவில் ஆறாம் இடத்திலும் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் இரண்டு சிற்றினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. செந்தலை வாத்து 1935லும், சிறுத்தை புலி 1949லும் காணப்பட்டது. அதன் பிறகு முற்றிலும் காணப்படவில்லை. இந்தப் பறவை தேரை புல்வெளி பகுதியில் காணப்பட்டது. அப்பகுதி விளைநிலமாக மாற்றப்பட்டதால் இப்பறவையினம் முற்றிலும் அழிந்துவிட்டது,. சிறுத்தை புலி திறந்த வெளி காடுகளிலும், புல்வெளிகளிலும் 19ம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. அதன் பிறகு இந்த விலங்கு எங்கும் காணப்படவில்லை. பாதுகாப்பு பற்றிய சில முக்கிய சொற்கள் அழிந்துவிட்ட உயிரினங்கள்: முற்றிலுமாக வாழிடத்திலோ அல்லது மற்ற பகுதிகளிலோ காணப்படாத உயிரினங்கள். அழிந்துவரும் உயிரினங்கள்: அழிவுக்கு உள்ளாகிவரும் உயிரினங்கள் முகந்தர உயிரினம்: அழிந்துவரும் மற்றும் பிரபலமான ஒரு சிற்றினத்தை பாதுகாப்பதால் முழு சூழலும் பாதுகாக்கப்படுகிறது. (உ.ம். புலி) குறிகாட்டி உயிரினம்: சூழலுக்கே உரித்தானதாக உள்ள சிற்றினம். (உ.ம். இருவாச்சி பறவை) ஆதார உயிரினம்: வாழும் சூழலில் ஆதிக்கம் நிறைந்த சிற்றினம். (உ.ம். யானை) அழிவின் விளிம்பில் உள்ள உயிரினம்: வாழிடங்கள் அழிக்கப்பட்ட நிலையில் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வரும் உயிரினங்கள். அழிவுக்கு ஆட்பட்டு வரும் உயிரினம்: வேகமாக குறைந்து வரும் உயிரினங்களை அழிவை நெருங்கிக் கொண்டுள்ள உயிரினங்கள் எனலாம். அரிதான உயிரினங்கள்: அரிதாக காணப்படும் உயிரினங்கள். விலங்கின பாதுகாப்பு அட்டவணை மி : 1972ம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காணப்படும் அழிந்துவரும் அல்லது அழிவுக்கு ஆட்பட்டு வரும் அல்லது அரிதான உயிரினங்கள். இந்தியாவில் அழிவுக்கு ஆட்பட்டு வரும் உயிரினங்கள் பாலுட்டிகள் 85 பறவைகள் 79 ஊர்வனங்கள் 25 இருவாழ்விகள் 66 மீன்கள் 28 நத்தைகள் 2 மற்றவை 21 தாவரங்கள் 246 வகைப்பாட்டின் படி இந்தியாவில் அச்சுறுத்தலுக்கு உட்பட்டு வரும் விலங்கினங்கள் அழிந்து வரும் விலங்கினங்கள் - 42அழிவுக்குள்ளாகிவரும் விலங்கினங்கள்- 92அழிவுக்கு ஆட்பட்டு வரும் விலங்கினங்கள்-188பாதுகாப்பு தேவைப்படும் விலங்கினங்கள்- 9அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்கள் -157விபரம் கிடைக்காத விலங்கினங்கள் -142குறைந்த பாதுகாப்பு தேவைப்படும் விலங்கினங்கள் -1413 வகைப்பாட்டின் படி இந்தியாவில் அச்சுறுத்தலுக்கு உட்பட்டு வரும் தாவரங்கள் அழிந்து வரும் தாவரங்கள் 45 அழிவுக்குள்ளாகிவரும் தாவரங்கள் 113 அழிவுக்கு ஆட்பட்டு வரும் தாவரங்கள் 89 பாதுகாப்பு தேவைப்படும் தாவரங்கள் 1 அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்கள் 22 விபரம் கிடைக்காத தாவரங்கள் 18 குறைந்த பாதுகாப்பு தேவைப்படும் தாவரங்கள் 68