இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF&CC), பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 -ன் 4வது திருத்தம் மூலம், பிப்ரவரி 16, 2022 அன்று பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) குறித்த வழிகாட்டுதல்களை அறிவித்தது. விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு இந்த விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) மூலம் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பிராண்ட் உரிமையாளர்கள் சந்தைபடுத்தும் பொருட்களிலிருந்து உருவாகும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் கழிவுகளை சேகரித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டிய கடமை அந்தந்த உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், பிராண்ட் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடையது ஆகும். இந்தக் கடமையை, மறுசுழற்சி, மறுபயன்பாடு அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அகற்றுதல், அதாவது சிமெண்ட் ஆலைகளில் மாற்று ஆற்றலாக பயன்படுத்துதல், கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்குதல், பிளாஸ்டிக்கிலிருந்து எண்ணெயை உருவாக்குதல், சாலை கட்டுமானம் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உரமாக்கல் மூலம் நிறைவேற்ற வேண்டும். இந்த வழிகாட்டுதல்களின்படி, நடுத்தர மற்றும் பெரிய உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், பிராண்ட் உரிமையாளர்கள் (PIBOs), விற்பனையாளர்கள், பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் (SIMPs), மற்றும் மறுசுழற்சி செய்பவர்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், கழிவுகளிலிருந்து ஆற்றல் மற்றும் கழிவுகளிலிருந்து எண்ணெய் பிரிப்பதற்கான வசதிகள் கொண்ட பிளாஸ்டிக் கழிவு கையாள்பவர்கள் (PWPs) தங்கள் EPR கடமைகளை நிறைவேற்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் (CPCB) உருவாக்கப்பட்ட மைய EPR இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் ஈடுபட்டுள்ள எந்தவொரு வணிகமும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யாமல் செயல்பட கூடாது. எனவே, தங்கள் செயல்பாடுகளில் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கைக் கையாளும் அனைத்து நிறுவனங்களும் (PIBOக்கள், SIMPக்கள் மற்றும் PWPகள்) 31 ஜனவரி க்குள் முன்னர், பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான EPR இணையதளத்தில் முழுமையான விவரங்களுடன் (பதிவு செய்வதற்கான வழிகாட்டு நடைமுறை மற்றும் வழிகாட்டுதல் கையேட்டின் படி PIBO-க்கள், SIMP-கள் மற்றும் PWP-கள் EPR இணையதளத்தில் பதிவுசெய்யவேண்டும்) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இணங்கத் தவறினால், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் பிரிவு 15 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் EPR உதவி மையம் இந்த செயல்முறையை எளிதாக்குவதற்காக, தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மார்ச் 2023 இல் ஒரு EPR உதவி மையத்தை நிறுவியுள்ளது. இது தமிழ்நாட்டில் EPR பதிவை திறம்பட செயல்படுத்துவதை ஆதரிப்பதற்காக அனைத்து வார நாட்களிலும் செயல்படுகிறது. EPR இணையதளத்தில் பதிவு செய்ய, வருடாந்திர கணக்கு பதிவேற்றம் மற்றும் இலக்கு நிறைவேற்றம் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பயிற்சி அமர்வுகள் மற்றும் செயல் முறை விளக்க கூட்டங்களை நடத்தியுள்ளது. மேலும், இந்நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு EPR கையேடு மற்றும் மறுசுழற்சியாளர்கள் விவரங்கள் அடங்கிய கோப்பகத்தையும் வாரியம் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் வாரியத்தின் வலைத்தளத்திலும் கிடைக்கின்றன. மேலும் தகவலுக்கு, EPR இணையதளத்தில் உள்ள முக்கிய ஆவணங்களைப் பார்க்கவும். மேலும் விண்ணப்பங்கள் குறித்த சந்தேகங்களுக்கு EPR உதவிமைய தொலைபேசி எண். 9500076438 அல்லது pwmsec@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும். மாவட்ட வாரியாக பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலைகள்