மருத்துவக்கழிவுகளை வெளியேற்றக்கூடிய மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள், கால்நடை ஆராய்ச்சி மையங்கள், விலங்குகள் காப்பகங்கள், ஆய்வுக் கூடங்கள் மற்றும் ரத்த வங்கிகள் அனைத்திற்கும் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள், 1998 பொருந்தக்கூடியதாகும். மேலும் மருத்துவக்கழிவுகளை கையாளுபவர்கள் கூட இவ்விதிகளுக்கு கட்டுப்பட்டவர்களாவர்.

மருத்துவகழிவுகள் பொது சுத்திகரிப்பு நிலையங்கள்

திருத்தியமைக்கப்பட்ட மருத்துவகழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 2000ன் 14வது விதிப்படி, கழிவுகளை சேகரிப்பதும், சாம்பலாக்கும் இயந்திரங்களை அமைக்க இடமளிப்பதும் நகராட்சிகளின் பொறுப்பாகும். மருத்துவமனைகளால் சேகரிக்கப்படும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து இறுதி குவிப்பிடத்திற்கு கொண்டு செல்வது பொது சுத்திகரிப்பு நிலையப் பொறுப்பாளரின் பணியாகும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகள் ஆய்வு

2000ல் திருத்தியமைக்கப்பட்ட மருத்துவகழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், (1998)-ஐ தமிழ்நாட்டில் செயல்வடிவம் கொடுக்கும் பணியை மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, இதுவரை 319 அரசு மருத்துவமனைகளையும் 1835 தனியார் மருத்துவமனைகளையும் இவ்வாரியம் பட்டியலிட்டுள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் ஒத்துழைப்போடு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் குப்பை குவியிடங்களை தெரிவு செய்து கழிவு மேலாண்மைக்கான பொது சுத்திகரிப்பு வசதிகளை அமைத்திட இவ்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 11 இடங்கள் பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பொது சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படும் இடங்கள்

காஞ்சிபுர மாவட்டம் - தென்மேல்பாக்கம், சென்னகுப்பம்

வேலூர் மாவட்டம் - கண்டிபேடு

தஞ்சாவூர் மாவட்டம் - செங்கிப்பட்டி

ராமநாதபுரம் மாவட்டம் - முத்துவயல்

நீலகிரி மாவட்டம் - குன்னூர்

பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுவரும் இடங்கள் பின்வருமாறு

கோயம்புத்தூர் மாவட்டம் - ஓரத்துக்குப்பை (2 நிலையங்கள்).

சேலம் மாவட்டம் - தங்கயூர்

விருதுநகர் மாவட்டம் - உத்திருமீக்கடகுளம்

திருநெல்வேலி மாவட்டம் - எட்டங்குளம்

தன்வெப்பக்கலன், நுண்ணலை அடுகலன், துண்டாக்கி, இறுக்கி, சாம்பளாக்கி போன்றன உடலுறுப்பு கழிவுகளுக்கும், ஆய்வுக்கூடங்கள், பாதுகாப்பான குவிப்பிட வசதி மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தும் வாகனங்கள் போன்றவை பொது சுத்திகரிப்பு மற்றும் அப்புறப்படுத்துதல் வசதிகள் ஆகும்.

மருத்துவக்கழிவில் அடங்கியுள்ள பொருட்கள் பின்வருமாறு

திசுக்கள், உள்ளுறுப்புகள், போன்ற மனித உடற்கூறுக் கழிவுகள்.

கால்நடை ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து வெளியேற்றப்படும்

விலங்கினக்கழிவுப் பொருட்கள்.

உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள்.

ஊசி, கத்தி, உடைந்த கண்ணாடி போன்ற கூரிய முனைகொண்ட பொருட்கள்.

விலக்கப்பட்ட மருந்துகள் மற்றும் விஷசெல் மருந்துகள்

காயக்கட்டு துணி, இரத்தம் தோய்ந்த பிளாஸ்டர், பஞ்சு மற்றும் ரப்பர் வடிகுழாய்கள் போன்ற பொருட்கள்.

மருத்துவமனையிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகள்.

வேதியியல் கழிவுகள் மற்றும் அடுகலன்களிலிருந்து வெளியேறும் சாம்பல்.

மருத்துவகழிவுகள் மேலாண்மைக்கு முதல்படியாக, கழிவுகளை 10 பிரிவுகளாக தரம்பிரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளின் பிரிவுகள்

சாம்பலாக்குதலுக்கு முன் எந்தவொரு இரசாயன சுத்திகரிப்பு முறைகளும் பின்பற்றப்படுவதில்லை. குளோரினேற்றம் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை சாம்பலாக்க முடியாது.

இரசாயன சுத்திகரிப்புக்கு குறைந்தபட்சம் 1% ஹைபோகுளோரைட் கரைசலை பயன்படுத்துதல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுதல்.

5 லட்சம் மக்கள்தொகைக்கும் குறைவாக உள்ள நகரங்கள் மற்றும கிராமங்களில் மட்டுமே கழிவுகளை ஆழமாக புதைக்க வழியுள்ளது.

முறையற்று மறு உபயோகம் செய்யாமல் இருக்க உருசிதைத்தல் மற்றும் துண்டாக்குதல் முறைகளை பின்பற்றுதல்.

ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்