தண்ணீர் உலகைத் திறத்தல்

குறிக்கோள்: பள்ளி வளாகத்தையும் தண்ணீரையும் தாண்டிச் சிந்தித்தல் - நம் வாழ்க்கையைத் தண்ணீர் எவ்வாறு தாக்குறுத்துக்கிறது? உடல்நலம், கல்வி, பொழுதுபோக்கு, தொழில்கள், பொருளாதாரம், இன்னும் மற்ற வாழ்க்கைக் கூறுகளுடன் தண்ணீர் எவ்வாறு தொடர்புடையதாகிறது?

குறிக்கோள்

பள்ளி வளாகத்தையும், ஏன் தண்ணீரையும் கூடத்தாண்டிச் சற்றே சிந்திப்போம்.

நமக்கு மழைப்பொழிவு மூலமே நீர் கிடைக்கிறது. இது நேடியாகவோ அல்லது ஏரிகள், ஆறுகள், ஓடைகள் அல்லது நிலத்தடி நீர் மூலமாகவோ கிடைக்கிறது. இது நீர்ச்சுழற்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. தட்ப வெப்பநிலை என நாம் அழைப்பதின் குறிப்பிட்ட கால அளவின் சராசரியே பருவநிலை ஆகும். இதற்கெனத் தனிச்சுழற்சியும், அமைப்பு முறையும் உண்டு. பருவநிலையின் சில அமைப்பு முறைகளில் மாற்றக்கூடியவை. இது நீர்ச் சுழற்சியைப் பாதிப்பதுடன் நமக்குத் தண்ணீர் கிடைப்பதையும் பாதிக்கிறது.

நம் வளாகத்தில் தண்ணீர் பயன்படுத்துவது மட்டுமின்றி நம் வீடுகள், வேளாண்தொழில், தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது. அதாவது நாம் உண்ணும் அல்லது நகரும் அனைத்துக்கும் தண்ணீர் இன்றியமையாதது என உணரப்படுகிறது. வாழ்க்கையின் இப்பகுதிகள் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகின்றன, இவை தண்ணீரைப் பயன்படுத்துவது நீடிக்குமா? மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் நீரைப் எப்படிப் பெறுகின்றன, பயன்படுத்துகின்றன? ஆற்றலுக்கும் நீருக்கும் என்ன தொடர்பு? யார் எவ்வளவு தண்ணீரைர் பெறுகின்றனர்? தண்ணீர் பெறுவதில் வேற்றுமை உண்டா? இவை போன்ற வினாக்கள் சில கீழே விபரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

பகுதி ஆ-வின் நோக்கம் தண்ணீர் பற்றிய செயல்களைக் கற்பதைத் தாண்டிச் சிந்திக்கவைத்தல், பள்ளியிலிருந்து வீடு, சமூகம், நாடு, புவிக்கோளம் என வெளிப்பரப்பில் சிந்திக்க வைத்தல், வரலாற்றடிப்படையிலே, எதிர்காலநோக்கிலே தண்ணீருக்குத் தொடர்புடையதென நீங்கள் எண்ணியும் பாத்திராத பிரச்சனைகள் பலவற்றுடன் இணைத்துச் சிந்தித்தல், செயல்களைக் கற்ற அனுபவங்களைப் பெரிதுபடுத்தி இத்தகைய சிந்தனையை மேற்கொண்டால்தான் நீடித்த வாழ்வு பற்றிய உண்மையான கற்றல் நிகழும், எளிய தீர்வு காண் அடிப்படையிலான அணுகுமுறையைத் தடுத்து இவற்றையெல்லாம் ஒன்றிணைத்துப் பார்க்கும் சிந்தனையே ஆகும். இத்திட்டத்தில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நன்கு ஆராய்ந்து நீங்கள் சொந்தமாக மேலும் சில வினாக்களையும் சேர்த்து விடையளிக்கலாம்.

அறிவுரைகள்

2500 சொற்களில் பகுப்பாய்வு கட்டுரை ஒன்று எழுதவும்.

பகுதி-அ வில் திரட்டிய கருத்துகள் கண்ணோட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

செயலறிக்கையில் இடம்பெறத்தக்க தரவுகள்

கீழ்காணும் வாய்ப்புக்களை பயன்படுத்தி ஆராய்வதால் உங்களைக் கவரும் மையக்கருத்தை அல்லது பல தலைப்புகளை அடையாளம் காணவும்.

தரவுகள், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் (மதிப்பிடக்கூடியது) புத்தகங்கள், நேர்காணல்கள், இணை பிறவற்றுடன் மேற்கோளிடல் நீங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களை எண்ணிப்பார்த்தல்

ஆதாரப்புத்தகத்தில் ஆரல்கடல் ஆய்வுப்குதியின் கீழ் மாதிரி அறிக்கையைக் காணலாம்.

கருவிப்பேழை

இப்பிரிவில் ஆராய்ந்திட கீழே சில வழிகாட்டு வினாக்கள் தரப்பட்டுள்ளன.

நீங்கள் உண்ணும் உணவு எங்கிருந்து கிடைக்கிறது? இவ்வுணவுப்பயிர் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது? உணவு பயிரிடும்போது எந்தெந்த காரணத்துக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது? இவற்றுக்கு எந்த ஆதாரத்திலிருந்து தண்ணீர் கிடைக்கிறது? இந்த ஆதாரங்களிலிருந்து இவற்றுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்குமா? இது நீடித்துப் பயன்தரக்கூடிய மாதிரியா? இல்லையெனில், எதிர்காலத்தில் என்ன நிகழும்?

நீருக்கும் உணவுக்குமான இணைப்பின் மற்றொரு முக்கிய கூறு என்னவெனில், புவிவெப்பமயமாதலினால் மேல் அட்சரேகை இடங்களில் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அதிக அளவில் உணவு உற்பத்தி நடைபெறும். ஆனால் கீழ் அட்சரேகை இடங்களில் நேரெதிரிடையான விளைவை அது ஏற்படுத்தும். இதிலிருந்து புவிசார் அரசியல் உணர்த்துவது என்ன? தண்ணீர்ப் பற்றாக்குறை எதைப் பயிரிடவேண்டும். எதைப் பயிரிடக்கூடாது என்பதை எப்படித் தீர்மானிக்கிறது? நீர்ப்பாசனம், விதைகள், நிலத்தடி நீர், ஆற்றுப் பாசன நிர்வாகம் என ஏற்படும் சவால்களை எதிர்நோக்க எந்தவகைத் தீர்வுகாண் அணுகுமுறைகளை மேற்கொள்வது? ஊட்டச்சத்தும் உடல்நலமும் உணர்த்துவதென்ன?

வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட நீர் என்ன ஆகிறது? நீரின் மீது வேளாண்மை ஏற்படுத்தும் தாக்கம் ஏதும் உண்டா? இந்தியா போன்ற நாடுகளில் வீட்டுப்பயன்பாட்டுக்கும் உணவு உற்பத்திக்குமன்றி வேறு எதற்கு நீர் பயன்படுகிறது.

அப்பயன்பாடுகளுக்கு நீர் எங்கிருந்து கிடைக்கிறது? இப்படி மற்றப் பயன்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பின்னர் நீர் எங்கே செல்கிறது? இத்தகைய மற்ற பயன்பாடுகள் நீரின் மீது தாக்கம் ஏற்படுத்துவது உண்டா? இத்தகைய வெவ்வேறு பயன்பாடுகளுக்கு எவ்வளவு தண்ணீர் செலவாகிறது? இப்பயன்பாடுகளுக்கென நீர் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது? இப்படிப் பல்வேறு பயன்பாடுகளுக்கும் நீர் ஒதுக்கீடு செய்ய என்ன கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன? உங்கள் பள்ளியைச் சுற்றிலும் வாழ்பவர்கள் யார்? எவ்வகையான சமூகப்பொருளாதார பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியவும். அக்குடும்பத்தினரிடம் நேர்காணல் செய்யவும், எவ்வளவு தண்ணீர் அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கேட்டறியவும், பல்வேறு பிரிவினர்க்குமிடையில் தண்ணீர் பயன்பாட்டில் வேறுபாடு உள்ளதா? ஆம் எனில் வேறுபாட்டுக்குக் காரணம் யாது?

பருவநிலை மாற்றம் என்றால் என்ன? அது எந்த வகையிலாவது தண்ணீரைப் பாதிக்கிறதா? அது மழைப்பொழிவு முறையைப் பாதிக்கிறதா? ஆம் எனில் இம்மாற்றங்கள் நம்மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? பல்லுயிர் பெருக்கம் என்றால் என்ன? பல்லுயிரிபெருக்கத்துக்கும் தண்ணீருக்குமான தொடர்பு யாது?

வயதில் மூத்தவர்களைப் பேட்டி கண்டு, அவர்களுடைய பிள்ளைப் பருவத்தில், குமரப்பருவத்தில் எப்படி தண்ணீர்த் தேவையை நிறைவு செய்து கொண்டார்கள் என்பதைக் கேட்டறியவும். இப்போது என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இப்போதைக்கும் அப்போதைக்கும் எவ்வளவு ஆற்றல் தேவைப்பட்டது.

இந்த நிலை நீடித்துப் பயன்தருமா, இல்லையெனில் அதற்காக நாம் செய்ய வேண்டியது என்ன என்பன போன்றவற்றைக் கேட்டறியவும்.

நம்முடைய பழைய தலைமுறையினர் வீணாகும் நீரை என்ன செய்தனர்? நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களும் கிராமங்களும் வீணாகும் நீரை எப்படிப் பயன்படுத்துகின்றனர்? மற்ற நாடுகள் வீணாகும் கழிவுநீரை என்ன செய்கின்றன?

நம் வீடுகளில், பள்ளிகளில், வேளாண்மையில் மற்றும் மற்ற பயன்பாடுகளில் தண்ணீர்ப் பயன்பாடு எவ்வளவு என நீங்கள் கருதுகிறீர்கள்? இப்படி மாற்றம் செய்வதற்கு நம் அதிகாரத்தில் உள்ளவை யாவை? என்ன வகையான மாற்றங்களுக்காக நாம் சமூகம், நகரம் அல்லது கிராம அளவிலான ஆட்சி, மாநில அரசு, நடுவண் அரசு, ஐநா போன்ற உலக அமைப்பு, இன்ன பிறவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியுள்ளது.

சிந்தனை

இதைப்போலவே தண்ணீருடன் தொடர்புடைய பல வினாக்களை நீங்கள் எழுப்ப முடியும். தண்ணீரைக் குறித்து உங்கள் ஆர்வத்தைத் துாண்டுவது எது? இதைப்பற்றி விரிவாக ஆராய்ந்து நீங்கள் அறிந்து கொண்டவற்றைக் கட்டுரையில் எழுதி பகிர்ந்து கொள்ளவும்.

பகுதி - அ - விருப்பத்தேர்வு செயல்கள்

தரப்பட்டுள்ள 4 விருப்பத் தேர்வுச் செயல்களில் 2 ஐ முடித்தால் பகுதி - அ முடிவடையும், இவை நீங்கள் விரும்பிச் செய்யக்கூடிய களிப்பூட்டும் செயல்களாகவே உள்ளன.

மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை வடிவமைத்தல்

குறிக்கோள்

உங்கள் வளாகத்துக்கென ஒரு மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை வடிவமைத்தல்

அறிவுரைகள்

பள்ளி வளாகத்தை அதில் உள்ள கட்டடங்களோடு படம் வரையவும். எந்தக் கட்டடத்தில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டுமோ அந்தக்கட்டடத்திலிருந்து பெறக்கூடிய மழைநீர் அளவை கணக்கிடவும்.

கீழ்க்காண்பவற்றைத் தீர்மானிக்கவும்

எந்தக் கூரைப் பகுதியிலிருந்து மழைநீரைச் சேகரிப்பது?

முதல் நீர் வெளியேற்று குழாயையும் வடிகட்டியையும் எங்கே அமைப்பது?

இந்த நீரை எதற்குப் பயன்படுத்துவது. நீர்ப்பாசனம், கழிப்பறை, நிலத்தடி நீர்ப் புதுப்பித்தல்

மழைநீர் பெறப்படும் கூரையிலிருந்து வடிகட்டுமிடத்துக்கும் அங்கிருந்து சேமிப்பு அல்லது பயன்படும் இடங்களுக்கும் இணைப்புக் கொடுத்திட எவ்வளவு நீளம் குழாய் தேவைப்படும்?

இத்தேவைகளுக்கேற்பத் தேவையான வடிகட்டி வகை

பள்ளியில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவதால் சேமிக்கப்படும் நீரின் அளவு மற்றும் மற்ற வகையில் ஏற்படக்கூடிய சேமிப்புகள் / நன்மைகளை விளக்கிக் கூறவும்.

சிந்தனை

மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை வடிவமைத்ததில் உங்கள் அனுபவம் எவ்வாறு இருந்தது?

இதனை உங்கள் வீட்டில் ஏற்படுத்தமுடியுமா?

இது எவ்வளவு மழைநீரைச் சேகரிக்கும்? இச்சேமிப்பு அளவு குறித்து உங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் என்ன கூறினர்? இச்சேமிப்பை இந்திய ரூபாயில் எவ்வளவாகக் கணக்கிடுவார்கள்?

இந்த அனுபவங்களினால் நீங்கள் கற்றது என்ன?

உங்களுடைய இந்தப் புதிய திறனைக் கண்டு உங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர் என்ன கூறினர்?

மழைமானியை வடிவமைத்தல்

குறிக்கோள்:

உங்கள் பகுதியின் மழைநீர்ப்பொழிவைப் புரிந்து கொள்ளுதல். அது நாளுக்கு நாள் எப்படி வேறுபடுகிறது என்பதைக் தெரிந்து கொள்ளுதல்.

அறிவுரைகள்

1 லிட்டர் (பாலியெத்லீன்) பிளாஸ்டிக் பாட்டில் (தண்ணீர்பாட்டில் / குளிர்பான பாட்டில்) சிறிய கத்தி / கத்திரிக்கோல், அசையாது நிறுத்திவைக்கக் கூடிய பூட்டுப்போன்று ஏதாவது

எப்படி பயன்படுத்துவது?

தடையின்றி மழைநீரைச் சேகரிக்க் கூடிய திறந்த வெளியில் வைக்கவும். (இறைவானம், குழாய், மரம் போன்றவற்றின் கீழே கூடாது)

ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணிக்கு நீர்ப்பிடிப்பை அளவுகோலால் அளந்து (மி.மீட்டரில்) பதிவு செய்யவும். பின்னர் மறுநாளைக்காக அதனைக் காலி செய்துவிடவும்.

உங்களுடைய அளவீடும், அலுவல அளவீடும் சரியாக உள்ளதா என ஒப்பிட்டுப்பார்க்கச் செய்தித்தாள், இணையதளம், உள்ளாட்சியமைப்பின் அறிவுப்பு ஆகியவற்றைப் பார்க்கவும்.

கருவிப்பேழை

பெற்ற மழைநீரின் அளவைப் பதிவுசெய்யவும்

சிந்தனை

கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?

இந்த அதிகரிப்பு / குறைவு பள்ளியை, அதன் ஆசிரியர்களை, உதவியவர்களை எந்த வகையில் பாதித்துள்ளது.

இந்த அதிகரிப்பு / குறைவு உங்கள் குடும்பத்தை எவ்வாறு பாதித்துள்ளது?

மழைநீரின் நிறம், மணம் யாது?

தண்ணீர் தேவையை ஒப்பீடு செய்தல்

குறிக்கோள்

உங்கள் பள்ளிக்கும் உங்களுக்குத் தெரிந்த மற்றொறு பள்ளிக்குமிடையில் ஒரு நபருக்குச் செலவாகும் தண்ணீரின் அளவில் ஏற்படும் வேறுபாட்டுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளுதல்.

அறிவுரைகள்

உங்கள் பள்ளியின் மொத்தத் தண்ணீர்த் தேவையை நீங்கள் இப்போது கணக்கிட்டிருப்பீர்கள்

1 இதைப் போலவே பக்கத்துப்பள்ளியின் தண்ணீர்த் தேவை குறித்த தகவல்களை முயற்சி செய்து பெறவும். இத் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். நீங்கள் காணக்கூடிய ஒற்றுமைகள் வேற்றுமைகள் யாவை?

2 ஒரு மாணவனின் நீர்த்தேவையை ஒப்பிடுக. எந்த ஒரு பயன்பாட்டில் உங்கள் பள்ளிக்கும் மற்ற பள்ளிக்கும் அதிக வேறுபாடு உள்ளது. எடுத்துக்காட்டாக கழிப்பறைகள் அல்லது தோட்ட வேலைகள்.

வேறுபாட்டுக்கான ஏதாவது செயல்முறையைக் காண்கிறீர்களா?

உங்களால் முடிந்தவரை இத்தகவலை ஆவணப்படுத்தவும்.

கருவிப்பேழை

சிந்தனை

உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் இது எந்த வகையில் பொருந்துகிறது?

நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்தும் விதத்தினை மற்றப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர்.? தண்ணீரை சிக்கனத்துடன் மற்றக் கருத்துகளையும் ஆழமாக எண்ணிப்பார்க்கவும். பள்ளி, கழிப்பறைத் துாய்மை, உடல்நலம், செலவுகள், வீணாதல் போன்ற மற்றத் தொடர்புடையவற்றின் மீது இதன் தாக்கம் எவ்வாறு உள்ளது?

தண்ணீர் வடிகட்டல் - சூரிய ஒளிவழித் தொற்று நீக்கம்

குறிக்கோள்

(பாலிஎத்லீன்) பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி எளிய முறையில் தண்ணீர் வடிகட்டுதலைப் புரிந்து கொள்ளுதல்.

அறிவுரைகள்

பாக்டீரியாவினால் தண்ணீர் மாசுபாடடைந்ததாக ஆய்வில் தெரியவந்தால் அதைத் துாய்மைப்படுத்தச் சூரிய ஒளிவழித் தொற்று நீக்க முறையைப் பயன்படுத்தவும். அந்நீர் மாதிரியை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து பார்க்கவும். சூரிய ஒளியைப் பயன்படுத்தும் இம்முறையில் நீரைத் தொற்று நீக்க முடியும், குடிக்கத் தகுந்த நீராக மாற்றமுடியும். இச்சூரிய ஒளி முறையானது வளரும் நாடுகளில் மக்கள் பலரின் இறப்புக்குக் காரணமான கழிச்சல் நோயைத் தடுக்கும், தீர்வாக அமையும். துாய்மையான (பாலிஎத்லின்) பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிச் சூரிய ஒளியில் 6 மணி நேரம் வைக்கவும். சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக்கதிர்கள் நோய்த்தொற்றுக்காரணமாக வைரஸ், பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளையும், ஒட்டுண்ணிகளையும் அழித்து விடும்.

கருவிப்பேழை

சிந்தனை

தண்ணீர் சுத்தகரிக்கப்பட்டது என்பதை நீ எவ்வாறு அறிவாய்?

இந்த முறை வீடுகளில் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட முடியும்?

இம்முறை சிறந்த முறை என உறுதி செய்யப்பட்டால் நீ எதற்கு முன்னுரிமையளிப்பாய்? விற்பனை செய்யப்படும் நீர் வடிகட்டியா, இம்முறையா?

ஆதாரம்: விப்ரோ லிமிடெட், பெங்களூரூ