ராம்சார் நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ஆம் நாள் உலக ஈரநில தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1971-ஆம் ஆண்டு இந்நாளில் ஈரான் நாட்டின் காஸ்பியன் கடற்கரை நகரமான ராம்சார் நகரில் உலக நாடுகள் ஒன்று கூடி ஈரநிலங்களின் வளங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்து, அதனை பாதுகாப்பது குறித்து ஓர் உடன்படிக்கை மேற்கொண்டது. அதன்படி ஈரநிலங்களுக்கு ராம்சார் நிலங்கள் என பெயரிடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையும், மீட்டெடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஈரநிலங்களை எவ்வாறு கண்டறிவது மற்றும் பாதுகாப்பது குறித்து அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் அந்தந்த நாடுகளில் தேசிய அளவில் வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டு, ஈரநிலங்களின் முக்கியத்துவம் கருதி பாதுகாப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. இத்துடன் ஈரநில சூழலியல் குறித்தான கொள்கைகள் வகுக்கப்பட்டு ஈரநிலங்களை நீடித்த நிலைத்த பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பராமரிக்கவும் அந்நிலங்களை நல்ல முறையாக பயன்படுத்தும்போது அதன் பலன்களை உள்வாங்கும் வகையில் நிலத்தடிநீர் சேமிப்பு, குடிநீர் மற்றும் உழவுக்கு பயனளிக்கும் வகையில் தண்ணீர் சுத்திகரிப்படைவதுடன், வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் பாதுகாப்பு தீர்வாகவும், மீன்பிடி தொழில், பல்லுயிர் பரவல் மற்றும் பாதுகாப்பு, காலநிலை மாறுதல் தாக்கம் மற்றும் கார்பன் தாக்கம் வாயுமண்டலத்தில் கலப்பதிலிருந்து பாதுகாக்கவும் ஈரநிலங்கள் பெரும் பங்காற்றுகிறது. அவ்வகையில் இந்திய நாடானது 1982-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் ராம்சார் உடன்படிக்கையில் தன்னையும் ஒரு உடன்படிக்கை நாடாக இணைத்துக் கொண்டது. எனவே, இந்த ஆண்டினை உலகத்தில் உள்ள ஈரநிலங்களை மீட்டெடுப்பதற்கான தருணமாக கடைபிடிப்பது காலத்தின் கட்டாயம் மற்றும் அவசர தேவையாக ஈரநிலங்கள் மீட்டெடுப்பது முதன்மைபடுத்தப்படுகிறது. தமிழ்நாடு ஈரநில ஆணையம் இந்தியாவில் உள்ள மொத்தம் 75 ராம்சார் தளங்களில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 14 ராம்சார் தளங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான ராம்சார் தளங்கள் ஒரு மாநிலத்தில் மட்டும் உள்ளது என்பதால் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் முதன்மை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது. அத்துடன் தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் (Tamil Nadu State Wetland Authority) ஏற்படுத்தப்பட்டு 13 ஈரநிலங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சாதனை என்பதுடன் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உள்ளூர் சமூகம் சார்ந்த மற்றும் நம் மாநிலத்தின் நலன் கருதி தமிழ்நாடு ஈரநில ஆணையம் மூலம் திட்டங்கள் வகுக்கப்பட்டு ஈரநிலங்கள் மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், நிலத்தடிநீர் சேமிப்பு, தண்ணீர் சுத்திகரித்தல், வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் தடுப்பு அரணாகவும், மீன் பிடித்தல், பல்லுயிர் பரவல் மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சூழல் காலநிலை தாக்கத்தை மட்டுப்படுத்தும் விதமாகவும், செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ராம்சார் தளங்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் வடுவூர் பறவைகள் சரணாலயம் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் கோடியக்கரை வன உயிரின மற்றும் பறவைகள் சரணாலயம் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சுசீந்திரம் தேரூர் ஈரநிலம் வேம்பனூர் ஈரநிலம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (Pallikaranai Marsh Reserve Forest) கரிக்கிலி பறவைகள் சரணாலயம் (Karikili Bird Sanctuary) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் (Vedanthangal Bird Sanctuary) பிச்சாவரம் அலையாத்தி காடுகள் (Pichavaram Mangrove) வடுவூர் பறவைகள் சரணாலயம் (Vaduvur Bird Sanctuary) உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் (Udhayamarthandapuram Bird Sanctuary) (Source: Ramsar Sites Information Service) கோடியக்கரை வன உயிரின மற்றும் பறவைகள் சரணாலயம் (Point Calimere Wildlife Bird Sanctuary) (Source: Tamil Nadu Tourism) சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் (Chitrangudi Bird Sanctuary) காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் (Kanjirankulam Bird Sanctuary) மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் (Gulf of Mannar Biosphere Reserve) கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் (Koonthakulam Bird Sanctuary) (Source: Ramsar Sites Information Service) சுசீந்திரம் தேரூர் ஈரநிலம் (Suchindram Theroor Wetland Complex) வேம்பனூர் ஈரநிலம் (Vembannur Wetland Complex) வெள்ளோடு பறவைகள் சரணாலயம் (Vellode Bird Sanctuary) ஈரநில நண்பர்கள் குழு இவ்வியக்கத்தின் கீழ், ஈரநில நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டு இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரநில நண்பர்கள் குழு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இதுவரை 63 குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 250 ஈரநில நண்பர்கள் குழு மாநிலத்தின் அனைத்து ஈரநிலங்களிலும் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஈரநில இயக்கத்தில் உள்ளூர் சமூகம் சேர்ந்த ஈரநில நண்பர்கள் மிகப்பரந்த அளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து சமூக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். பள்ளிக்கரணை சதுப்பு நில நண்பர்களின் செயல்கள் மற்றும் பங்களிப்பினை பாராட்டும் வண்ணமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்த மேற்கண்ட நண்பர்களின் சேவையை மேலும் ஊக்கப்படுத்தும் வண்ணமும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களால் உலக ஈரநில தின நாளில் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் பாராட்டப்பட்டார்கள். எதிர்வரும் நாட்களில் அரசினால் கூடுதல் எண்ணிக்கை ஈரநில நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டு அவர்களின் செயல்கள் ஊக்கப்படுத்தப்பட்டு ஈரநிலங்கள் மீட்டெடுக்கும் வகையில் பங்கெடுக்க தமிழ்நாடு ஈரநில ஆணையம் மூலம் வழிவகை செய்யப்படுகிறது. ஆதாரம் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம்