குறைந்தளவு கழிவுகளை உருவாக்குதல்

மீள உபயோகிக்கக்கூடிய பொருட்களை வாங்குங்கள். பிளாஸ்டிக் கொள்கலன்களுக்கு பதிலாக, கண்ணாடிக் கொள்கலன்களை உபயோகியுங்கள். உ-ம்: பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை உபயோகியுங்கள்.

எப்போதும் புதிய பொருட்களை வாங்காமல், பாவிக்கக்கூடிய பொருட்களை திருத்தி மீள்பாவனை செய்யுங்கள்.

ஒரு அடுக்கு பொதியிடல் போதுமாக இருக்கையில் பல அடுக்கு பொதி செய்யப்பட்ட பொருட்களை வாங்காதீர்கள். நாம் வீசியெறிபவற்றில் 33 வீதம் பொதியிடல் கழிவுகளே ஆகும்.

அடிக்கடி உபயோகிக்கும் சாதனங்களுக்கு மீள்பாவனை செய்யக்கூடிய ரீசார்ஜிங் பற்றறிகளை பயன்படுத்துங்கள்.

காகிதத்தின் இருபக்கத்திலும் கொப்பி அல்லது பிரின்டிங் செய்யுங்கள்.

கடித உறைகள், ஃபோல்டர்கள், பேப்பர் க்ளிப்புகளை மீளவும் உபயோகியுங்கள்.

காகிதம் ஊடாக தொடர்பாடுதலை தவிர்த்து, மின்னஞ்சலை உபயோகியுங்கள்.

மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தை பயன்படுத்துங்கள்.

புதிய ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்து, பழைய ஆடைகளை சரிசெய்து உபயோகியுங்கள்.

உபயோகித்த தளபாடங்களை வாங்குங்கள். புதிய தளபாடத்தை விட குறைந்த விலையிலேயே இவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது இன்னுமொரு அனுகூலமாகும்.

இயற்கை உரம் – மக்கிப்போகும் முறையில் இயற்கை உரத்தினை உருவாக்குவது, உங்கள் கழிவுகளை பாதுகாப்பாக அகற்வுவதற்கு உதவுவதுடன், நீங்கள் இருக்கும் நிலத்தையும் பண்படுத்த உதவும்.

மரங்களை நடுங்கள். அவற்றை வெட்டி அழிக்க வேண்டாம் - மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. இயற்கைக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக மரங்களே விளங்குகின்றன. மரங்களை பாதுகாப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நிலத்தை மாத்திரமல்லாமல், நீர் மற்றும் காற்று மாசடைதலையும் தவிர்க்கின்றீர்கள். உயரமாக வளர்ந்து நிழல் கொடுக்கக்கூடிய மரங்களை வளருங்கள்

ஆதாரம்: சென்னை நலத்தகவல்கள் இதழ்