சீப் சீயாடல் வளிமண்டல மாசுபாடே இன்றைய நிலையில் மிகபெரிய கவலையாகும். இவை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கிறது. புவி வெப்பமயமாதல் ஓசோன்படலம் பாதிக்கப்படுதல் புகைமூட்டம் மற்றும் அமிலமழை தொழிற்சாலைகள், இரசாயனங்கள், பெட்ரோல், நிலக்கரி, இயற்கைவாயு, எரியூட்டல், வெடிப்பொருள்கள் இருந்து வெளியேறும் இரசாயனப் பொருட்கள், பூசு வர்ணக்கலவைகள் மற்றும் நுண் துகள்கள் எங்கும் பரவும் பொழுது இவை காற்றுமண்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் இவை பூமியை அடையுமாயின் அங்கேயும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கடல் நீர்மட்டம் உயருதல் வெப்பநிலை உயர்வின் காரணமாக துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர காரணமாக அமைகிறது. கடல் மட்டம் இந்த நூற்றாண்டின் இறுதியில் 1மீட்டர் வரை உயரும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோரப்பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படுவதால் கடற்கரையோர மக்கள் கூட்டம் கூட்டமாக உள்நாட்டிற்கு இடம் பெயர வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு இடம் பெயர்வதால் உள்நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் அப்பகுதிகளில் இயற்கை வளங்கள் வெகுவிரைவில் அழிக்கப்பட்டுவிடும். குறிப்பாக சீனா, இந்தியா, வங்காளதேசம், இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அதிகமான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. பாதுகாப்புத்திரையில் ஓட்டை குளிர்சாதனப்பெட்டிகளிலும், குளிரூட்டிகளிலும் அழுத்தம் கொண்டு அடைக்கப்பட்ட கலன்களிலும் பெருமளவுக்கு பயன்படுத்தப்படும் குளோரா புளுரோ கார்பன் வாயு ஓசோன்படலம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக உள்ளது. இத்தகைய ஓட்டைகள் அண்டார்டிக் துருவப்பகுதியின் மேலே உள்ள ஓசோன் அடுக்கில் அதிகம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓசோன் படலத்தால் தடுக்கப்படும் புறஊதாக் கதிர்கள் பூமியை வந்தடைகிறது. இத்தகைய அபாயகரமான கதிர்கள் தோல் புற்றுநோயையும், கண்புரை நோய்களையும் உண்டாக்கிறது. காற்றை மாசுபடுத்துவது யார்? தினசரி வாழ்க்கை முறைகளான விவசாயம், படிம எரி பொருட்களை எரித்தல் அதிக அளவிலான ஆற்றல் பயன்பாடு, வெப்பநிலை சீராக்கக் கருவிகள் உபயோகம், குளிர்சாதனப் பெட்டிகள் போன்றவை பசுங்குடில் விளைவை ஏற்படுத்துகின்றன. இது தவிர நெல் பயிர் வளர்ப்பு, கால்நடைக்கழிவுகள், தாவரங்கள் அழுகுதல், குப்பை மேடுகள் போன்றவை அதிக அளவில் மீத்தேன் வாயுவை வெனியேற்றுகின்றன. உரங்கள் சார்ந்த விவசாயம், குளிரூட்டிகள், தீ அணைப்பு கருவிகள் போன்றவை குளோரா புளுரோகார்பன் வாயுவை அதிகம் உபயோக்கின்றன. இதுவே 20% அளவுக்கு ஓசோன் படலம் பாதிப்படைய காரணமாக உள்ளது. வாகனங்களால் ஏற்படும் மாசுகள் இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் வசிக்கும் நகரங்கள் 23 உள்ளன. இந்த நகர மக்கள் மட்டும் இந்தியாவின் 33 சதவிகித வாகனங்களை வைத்துள்ளனர். இதன் காரணமாக பாதிக்கும் அதிகமான காற்றுமாசுபாடு இந்த நகரங்களில் ஏற்படுகிறது. வாகனப்புகை மிகவும் அபாயகரமான தூசுகள், காரீயம், கார்பன் மோனாக்சைடு கரியமிலவாயு, நைட்ரஜனின் ஆக்ஸைடுகள், கந்தகடை ஆக்ஸைடு எரியாத கார்பன்கள், நீராவி போன்றவற்றை வெளியேற்றுகின்றன. பொருளாதார காரணங்களுக்காக மட்டுமே எண்ணிக்கையில் அதிகமாகும் டீசல் வாகனங்கள், ஓட்டைகள் நிறைந்த புகை பரிசோதனை திட்டங்கள், கலப்படம் செய்யப்பட்ட எரிபொருட்களின் புழக்கம், மற்றும் மிக மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்கள் போன்றவை உடனடியாக கவனிக்கப்பட்டுசரி செய்யப்பட வேண்டியவைகளாகும். ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்